Monday, October 15, 2018

Introduction - அறிமுகம்

பதிப்பக அறிமுகம்

மாத்வ சம்பிரதாயத்தில் கன்னடத்தில் பல்வேறு அரிய புத்தகங்கள் உள்ளன. அனைவரும் படிக்கும்படியான இந்தப் புத்தகங்களை, தமிழ் மட்டுமே அறிந்த மாத்வர்கள் படிக்க முடியாததால், பல அரிய தகவல்களை அறியமுடியாமல் போகின்றது. இந்த பிரச்னையை போக்குவதற்கு, அனைவரும் படிக்க ஏதுவான பயனுள்ள புத்தகங்களை மொழிபெயர்த்து தமிழில் வெளியிடத் தொடங்கியுள்ளோம். 

கன்னடத்தில் எழுதுபவர்கள் பலரை தொடர்பு கொண்டு, அவர்களின் மதிப்புமிக்க புத்தகங்களை தமிழில் கொண்டு வருவதற்காக அனுமதி வாங்கி, அவற்றை மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் உள்ளோம்.

இதுவரை வெளியான புத்தகங்கள் மற்றும் அமேசான் கிண்டிலில் படிக்கும்படியான ஈ-புத்தகங்களின் பட்டியல் / தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன. 

தமிழ்ப் புத்தகங்கள், சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் பல மடங்கள், கடைகளில் கிடைக்கின்றன. மேலும் தகவல்கள் வேண்டுவோர் எம்மை தொடர்பு கொள்ளவும். 

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பெங்களூரு
கைப்பேசி: 89044 58276


ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம்

 ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ் பெங்களூரு 18.06.2026 ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால், இன்றோடு நமது குரு எனக்கு...