Friday, December 25, 2020

ஹரிதாச விஜயம் - டிசம்பர் 2020 அப்டேட்ஸ்

 ஹரிதாச விஜயம் - டிசம்பர் 2020 அப்டேட்ஸ்

1. ஜனவரி 2021 ஹரிதாச விஜயம் இதழ் தபாலில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதனை ஆன்லைனில் படிக்க இங்கு க்ளிக்கவும். 

https://tinyurl.com/ydypvalj

2. டிசம்பர் 2020 மாதத்தின் இலவச ஈ-புத்தகம்:

ஜாம்பவதிப்ரிய விட்டலதாசரின் கட்டுரைகள்: தமிழில்:

https://archive.org/details/jpv-tamil

3. இதுவரை வந்த அனைத்து இலவச ஈ-புத்தகங்களையும் இங்கு பார்த்து, டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

https://archive.org/details/@sathya_narayanan

4. கீழ்க்கண்ட புதிய புத்தகங்களை வாங்கி ஆதரவு தரவும். இதனால் மேலும் பற்பல புத்தகங்கள் வருவதற்கு உதவியாக இருக்கும். 

அ. மத்வநாமா (தமிழில் - அர்த்தத்துடன்). தக்க ஆதாரங்களுடன் மிகவும் விளக்கமாக 250 பக்கங்கள் கொண்ட புத்தகம். ரூ.100.

ஆ. நாராயண பஞ்சர - ஸ்ரீபிரசன்னவெங்கட தாசரின் கிருதி. ரூ.50. 

மற்றும்

இ. ஸ்ரீவித்யா பிரசன்ன தீர்த்தரின் கட்டுரைகள் & நாடகங்கள். 200 பக்கங்கள் ரூ.80

இந்த இரு புத்தகங்களையும் வாங்குவதற்கு தொடர்பு கொள்ளவும்: சந்திரிகா பிரகாஷன. தொலைபேசி: 90437-47036.

ஈ. 30 புத்தகங்களைக் கொண்ட விரத புத்தக செட். அனைத்து விரதங்களின் பூஜா விதானம், ஸ்தோத்திரங்கள், கன்னட கிருதிகள், சமையல்கள் இவற்றுடன் அந்த விரத்தைப் பற்றிய - ஏன், எதற்கு, எப்படி, எப்போது - போன்ற பல அபூர்வ தகவல்கள், தக்க ஆதாரங்களுடன் நிறைந்த புத்தகங்கள். 3500+ பக்கங்களைக் கொண்டது. தற்போது முன்பதிவு செய்ய: ரூ2000+250. புத்தக வெளியீடு: மத்வநவமியன்று. 21.2.2021. முன்பதிவு செய்ய: www.jagadgurusrimadhvacharya.com சென்று அங்கு பணம் செலுத்தவும். 

நன்றி.

ஹரே ஸ்ரீனிவாசா

சத்ய நாராயணன்

8904458276

haridasa.vijayam@gmail.com

Saturday, November 21, 2020

ஹரிதாச விஜயம் - நவம்பர் 2020 அப்டேட்ஸ்

ஹரிதாச விஜயம் - நவம்பர் 2020 அப்டேட்ஸ்

1. டிசம்பர் 2020 ஹரிதாச விஜயம் இதழ் இன்று தபாலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக ஆன்லைனில் படிக்க இங்கு க்ளிக்கவும். 

https://tinyurl.com/yyfre9xm

2. நவம்பர் 2020க்கான இலவச தமிழ் ஈ-புக்:

ஸ்ரீசத்யவீர தீர்த்தர். (மிருத்திகா பிருந்தாவனம் @ சத்யவிஜயநகரம். ஆராதனை நாள்: 24-11-2020).

https://archive.org/details/sri-sathyaveera-theertharu


3. அடியேன் மொழிபெயர்ப்பில் மத்வநாமா வெளியாகி உள்ளது. இதனை வாங்குவதற்கு : ஸ்ரீஹயவதன சேவா சமிதி - தொடர்பு கொள்ளவும். Contact details attached. (என்னிடம் இதன் பிரதிகள் இல்லை).


4. அடியேன் மொழிபெயர்ப்பில் நாராயண பஞ்சர வெளியாகி உள்ளது. இதனை வாங்குவதற்கு: சந்திரிகா பிரகாஷன - தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்: 90437-47036 (என்னிடம் இதன் பிரதிகள் இல்லை).

5. 30-புத்தக-செட். தமிழ் விரதங்கள் / பண்டிகைகள் / ஹரிதினங்கள்:

கன்னடத்தில் வெளியாகி பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ள இந்த 30-புத்தக-செட்டினை, ஸ்ரீஹரியின் அருளால், அடியேன் தமிழில் தற்போது மொழிபெயர்த்து வருகிறேன்.  வெளியீடு 21-2-2021 (ஸ்ரீமத்வநவமி) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. (30 புத்தக பட்டியல் கீழே உள்ளது). மேலதிக தகவல்களுக்கு இந்த யூட்யூப் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும். இதில் பல அறிமுக வீடியோக்கள் இதில் வருகின்றன.

https://www.youtube.com/channel/UCuB6UUt-j_G8bMF-pa68ggA






ஹரே ஸ்ரீனிவாசா

சத்ய நாராயணன்

8904458276

haridasa.vijayam@gmail.com


Tuesday, October 27, 2020

ஹரிதாச விஜயம் - அக்டோபர் 2020 அப்டேட்ஸ்

ஹரிதாச விஜயம் - அக்டோபர் 2020 அப்டேட்ஸ்

1. மாதம் ஒரு இலவச தமிழ் ஈ-புக்:

இந்த லிங்க்ல் சென்று இதுவரை வந்த ஈ-புக்’களை டவுன்லோட் செய்து கொள்ளவும். 

http://jagannathakesava.blogspot.com/2020/10/blog-post.html

2. நவம்பர்2020 இதழ்:

எவ்வளவோ திட்டமிட்டும், நவம்பர் இதழை முன்கூட்டியே தபாலில் சேர்க்க முடியவில்லை. நவராத்திரி விடுமுறைகளால் இந்த இதழ் தாமதமாகி, 29 அல்லது 30ம் தேதிதான் தபாலில் சேர்க்கப் போகிறோம். 

3. 30-புத்தக-செட். தமிழ் விரதங்கள் / பண்டிகைகள் / ஹரிதினங்கள்:

கன்னடத்தில் வெளியாகி பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ள இந்த 30-புத்தக-செட்டினை, ஸ்ரீஹரியின் அருளால், அடியேன் தமிழில் தற்போது மொழிபெயர்த்து வருகிறேன்.  வெளியீடு 21-2-2021 (ஸ்ரீமத்வநவமி) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய ஒரு அறிமுகம் கொடுப்பவர், இதனை கன்னடத்தில் தொகுத்த: திரு.பெம்மத்தி வெங்கடேஷாச்சார் அவர்கள்.  (30 புத்தக பட்டியல் கீழே உள்ளது).

https://drive.google.com/file/d/15xtR7q0lKkNyQnf-9feHH8dpJRde_IXQ/view?usp=sharing

4. மத்வநாமா - தமிழ் புத்தகம் வெளியீடு.

ஸ்ரீஹரியின் கருணையால், அடியேனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மத்வநாமா புத்தகம், கோவை சிங்காநல்லூர் ஸ்ரீஹயவதன சேவா சமிதி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகம் உங்களுக்கு வேண்டுமெனில், அவர்களை தொடர்பு கொள்ளலாம். (என்னிடம் இப்புத்தகத்தின் பிரதிகள் விற்பனைக்கு இல்லை). See attached images.

ஹரே ஸ்ரீனிவாஸா

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

8904458276

***





Friday, October 2, 2020

மாதம் ஒரு இலவச தமிழ் ஈ-புக்

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு

8904458276. haridasa.vijayam@gmail.com

மாதம் ஒரு இலவச தமிழ் ஈ-புக் (Free PDF)

கீழ்க்கண்ட லிங்க்களிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

****

நடந்து கொண்டிருக்கும் அதிக ஆஸ்விஜ மாதத்தில் புத்தக தானம் செய்ய, புத்தகங்களை 50% தள்ளுபடியில் வாங்குவதற்கு, தொடர்பு கொள்ளவும். ஹரே ஸ்ரீனிவாசா.

****

1. June2020:

கன்னட ஹரிதாச பாடல்களின் தமிழ் விளக்கங்கள்

https://archive.org/details/dasar-songs-compile-2.0


2. July2020:

ஹரிகதாம்ருதசாரம் - மூலம் மட்டும்

https://archive.org/details/hks-moolam-tamil-1.0


3. August2020:

ஹரிகதாம்ருதசாரம் - பாவபிரகாசிகை உரையுடன்

https://archive.org/details/bhava-prakashike-hks-commentary-tamil-translation-1.0


4. September2020:

ஸ்ரீபிரசன்னவெங்கடதாசரின் - நாராயண பஞ்சர

https://archive.org/details/narayana-panjara-1.0


(தமிழகத்தைச் சேர்ந்த) அறியப்படாத ஹரிதாசர் - ஸ்ரீநரஹரி தாசர்

https://archive.org/details/narahari-dasaru-tamil


5. October2020:

இந்தா குருகள காணேனோ - ஸ்ரீசத்யபிரமோத தீர்த்தரைப் பற்றிய ஒரு தீர்க்க க்ருதி - தமிழ் அர்த்தத்துடன்

https://archive.org/details/intha-gurugala-kaneno-1.0


***


Wednesday, September 2, 2020

செப்டம்பர்2020 - ஹரிதாசர்களைப் பற்றிய கேள்வி பதில் போட்டி

 * ஹரிதாசர்களைக் குறித்த மாதாந்திர கேள்வி பதில் போட்டி -2.

* சென்ற மாதத்தின் விடைகள் இங்கே உள்ளது. விடைகளை அனுப்பி புத்தகப் பரிசு பெற்றவர்கள் ஐந்து பேர்.

* கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதி செப்டம்பர் 25ம் தேதிக்குள் : 8904458276 எண்ணிற்கு வாட்சப் அல்லது haridasa.vijayam@gmail.com க்கு ஈமெயில், அனுப்பலாம். 

* செப்டம்பர்/அக்டோபர்2020 மாதங்களில் ஆராதனை / புண்ய தினம் கொண்டவர்களைப் பற்றியும் + சில பொதுவான கேள்விகளும் உள்ளன.

* சரியான விடைகள் அனுப்புபவர்களுக்கு புத்தகப் பரிசு உண்டு.

* இதை உங்கள் க்ரூப்களில் ஷேர் செய்து, அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். --- 

** FROM ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு.

***

1. இவர்களில் யார் கனவில் அங்கிதம் பெற்றார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C ஜகன்னாததாசர்

D கோபாலதாசர்

2. பாகேபல்லி சேஷதாசர் யாரிடமிருந்து அங்கிதம் வாங்கினார்?

A ஸ்ரீநிதி விட்டலர்

B ஸ்ரீவர விட்டலர்

C தந்தெமுத்துமோகன தாசர்

D முத்துமோகன தாசர்

3. 15/16ம் நூற்றாண்டில் ஹரிதாசர்களின் தலைமையிடம்?

A ஹம்பி

B மந்திராலயம்

C ராய்ச்சூர்

D திருப்பதி

4. த்வைத சித்தாந்தத்தைப் பற்றி அதிக தகவல்கள் தரும் கிரந்தம்?

A மணிமஞ்சரி

B தத்வபிரதீபா

C மத்வ விஜய

D பிரம்ம சூத்ர

5. ப்ராணேச தாசருக்கு சமகால யதிகள்?

A சத்யதர்ம தீர்

B சத்யபோத தீர்

C புவனேந்திர தீர்

D A&B

6. இவர்களில் யார் ஸ்ரீஹரியிடமிருந்து நேரடியாக அங்கிதம் பெற்றார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C ஜகன்னாததாசர்

D கோபாலதாசர்

7. ஹரிதாசர்கள் முக்தியடைய எந்த வழியை பின்பற்றினர்?

A கர்ம மார்க்கம்

B ஞான மார்க்கம்

C யோக மார்க்கம்

Dபக்தி மார்க்கம்

8. மத்வருக்கு முன் எவ்வளவு பாஷ்யகாரர்கள் இருந்தனர்?

A 12

B 24

C 21

D 18

9. ஜலஜேஷ்ட நிபாகாரம்.. _ குரும் பஜே

A புரந்தர

B விஜய

C ஜகன்னாத

D கோபால

10. இவற்றில் எது சப்த (7) தாளத்திற்கு உட்பட்டது?

A கீர்த்தனை

B உகாபோகம்

C சுளாதி

D மற்றவை

11. ஐஜி வெங்கட் ராமாசார்யரின் அங்கிதம்?

A கோபாலவிட்டலா

B வரதகோபாலவிட்டலா

C குருகோபாலவிட்டலா

D வாசுதேவ விட்டலா

12. கலியுகத்தில் மோட்சத்திற்கு என்ன செய்யவேண்டும் என்கிறார் ஸ்ரீபாதராஜர்?

A தியானம்

B யக்ஞம்

C அர்ச்சனை

D கீர்த்தனை

13. இவர்களில் யார் அங்கிதம் தானே வைத்துக் கொண்டார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C கனகதாசர்

D கோபாலதாசர்

14. பிராணேச தாசரின் சொந்த ஊர்?

A பாகல்கோட்

B கர்ஜிகி

C காகிண்டிகி

D லிங்கசுகுர்

15. எந்த ஹரிதாசருக்கு பிருந்தாவனம் உள்ளது?

A ஜகன்னாத தாசர்

B கோபாலதாசர்

C மஹிபதி தாசர்

D பிரசன்னவேங்கட தாசர்

16. லம்போதர, கெரெய நீரனு - இவை __ என்று அழைக்கப்படுகின்றன.  

A பிள்ளரி கீதே

B லக்‌ஷ்ய கீதெ

C லக்‌ஷண கீதெ

D மேற்கூறிய அனைத்தும்

17. ஜகன்னாததாசர் அங்கிதம் வாங்கிய இடம்

A பண்டரிபுரம்

B மான்வி

C திருப்பதி

D உடுப்பி

18. 17/18ம் நூற்றாண்டில் ஹரிதாசர்களின் தலைமையிடம்?

A ஹம்பி

B மந்திராலயம்

C ராய்ச்சூர்

D திருப்பதி

19. நாராயண கதா எனப்படுவது எது?

A ராமாயணம்

B பாகவதம்

C மகாபாரதம்

D பிரம்ம சூத்ர

20. அங்கிதம் என்றால்?

A கையெழுத்து-பெயர்

B பிம்பரூபி பரமாத்மா  

C புனைபெயர்

D மேற்கூறிய அனைத்தும்

21. நம: ஸ்ரீபாதராஜாய நமஸ்தே __ யோகினே

A விஜய

B ஜகன்னாத

C கோபால

D வியாச

22. எந்த ராயர் மடத்து ஸ்வாமிகளின் அனுக்கிரத்தை ஜகன்னாததாசர் பெற்றிருந்தார்?

A வசுதேந்திர தீர்த்தர்

B வரதேந்திர தீர்த்தர்

C இருவரும்

D இருவரும் இல்லை

23. நவபிருந்தாவனத்தில் நடுவில் இருக்கும் பிருந்தாவனம் யாருடையது?

A வியாசராஜர்

B பத்பனாப தீர்த்தர்

C ராம தீர்த்தர்

D ஸ்ரீனிவாச தீர்த்தர்

24. ஜகன்னாததாசருக்கு 40 ஆண்டுகள் ஆயுள்தானம் கொடுத்தவர் யார்?

A மோகனதாசர்

B விஜயதாசர்

C கோபாலதாசர்

D வியாசவிட்டலா

25. பிராணேச தாசரின் இயற்பெயர்?

A யோகப்பா

B திருகப்பா  

C ஜகன்னாத

D ஸ்ரீனிவாச

***





Saturday, August 8, 2020

ஆகஸ்ட்2020 - ஹரிதாசர்களைப் பற்றிய கேள்வி பதில் போட்டி

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு


* ஹரிதாச விஜயம் மாத இதழில் வரும் ஹரிகதாம்ருதசார Crossword puzzle உடன் இன்னொரு மாதாந்திர போட்டியும் அறிவிப்பு.

* ஹரிதாசர்களைப் பற்றிய கேள்விகள். மாதம் ஒன்று. 

* ஆகஸ்ட்2020ல் ஆராதனை / புண்ய தினம் கொண்டவர்களைப் பற்றிய கேள்விகள்

* விடைகளை ஆகஸ்ட் 15க்குள் 8904458276க்கு வாட்சப் அல்லது haridasa.vijayam@gmail.comக்கு மெயிலில் அனுப்பவும்.

* சரியான விடைகள் அனுப்புபவர்களுக்கு புத்தகப் பரிசு உண்டு .

* இதை உங்கள் க்ரூப்களில் ஷேர் செய்து, அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

* மத்வ சித்தாந்த ஹரிதாசர்களைப் பற்றிய அரிய தகவல்களுடன் வரும் தமிழ் மாத இதழ் ஹரிதாச விஜயத்திற்கு subscribe செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹரே ஸ்ரீனிவாசா.


1. ஸ்ரீராகவேந்திரரின் இயற்பெயர்?

A.வெங்கண்ணா

B.வேணுகோபாலா

C.வெங்கடநாதா

D.வெங்கப்பா


2.பிரசன்னவேங்கட தாசரின் சொந்த ஊர்?

A.பாகல்கோடெ

B.கர்ஜிகி

C.காகிண்டிகி

D.ராய்ச்சூர்


3.ஜகன்னாததாசர் யாருடைய அம்சமாக கருதப்படுகிறார்?  

A.நாரதர்

B.ருத்ரர்

C.சஹ்லாத

D.பாண்டு


4.ராகவேந்திர விஜயம் இயற்றியவர்?

A.நாராயணாசார்ய

B.பண்டிதாசார்ய

C.குருராஜாசார்யர்

D.வாசுதேவாசார்யர்


5.ஸ்ரீராகவேந்திரரின் சமகாலத்திலேயே ராகவேந்திர விஜய கிரந்தம் எழுதப்பட்டது

A.சரி

B.தவறு

6.முதன்முதலில் கன்னடத்தில் தேவர நாமாக்களை இயற்றியவர்?

A.ஸ்ரீபாதராஜர்

B.ஸ்ரீவியாசராஜர்

C.ஸ்ரீ நரஹரி தீர்த்தர்

D.ஸ்ரீஜய தீர்த்தர்


7. ஹரிதாச சாகித்யத்தின் இன்னொரு பெயர்?

A.பக்தி சாகித்யம்

B.ஞான சாகித்யம்

C.வைராக்ய சாகித்யம்

D.சித்தாந்த சாகித்யம்


8.பிரசன்னவேங்கட தாசர் யாரிடமிருந்து அங்கிதம் பெற்றார்?

A.குருவிடமிருந்து

B.தனக்குதானே 

C.திருப்பதி வெங்கடாசலபதி

D.கனவில்


9. ஹரிதாச சாகித்யத்தின் நோக்கம்?

பக்தியை பரப்புதல்

த்வைத சித்தாந்த கருத்துகளை பரப்புதல்

ஸ்ரீஹரியின் நற்குணங்களை விளக்குதல்

மேற்கூறிய அனைத்தும்


10.அவரின் பெற்றோர் யாருக்கு சேவை செய்ததால், ஜகன்னாததாசர் பிறந்தார்?

A.திருப்பதி ஸ்ரீனிவாசன்

B.உடுப்பி கிருஷ்ணன்

C.மந்திராலய ராகவேந்திரர்

D.பண்டரிபுர விட்டலன்


11.ஸ்ரீராகவேந்திரருக்கு தரிசனம் கொடுத்து, சன்யாசம் ஏற்கும்படி சொன்னவர்?A.பாரதிதேவி

B.லட்சுமிதேவி

C.சரஸ்வதிதேவி

D.இவர்கள் அனைவரும்


12.ஹரிதாச சாகித்யம் எதனுடைய சாரம்?

A.வேத உபநிஷத்கள்

B.த்வைத சித்தாந்தம்

C.இதிகாச புராணங்கள்

D.மேற்கூறிய அனைத்தும்


13.ஜகன்னாததாசரின் இயற்பெயர்?  

A.நரசிம்ம

B.ஜகன்னாத

C.ஸ்ரீனிவாச

D.கோபால


14.ஸ்ரீராகவேந்திரருக்குப் பின் பட்டத்திற்கு வந்தவர் யார்?

A.ஸ்ரீயோகீந்திரர்

B.ஸ்ரீசூரேந்திரர்

C.ஸ்ரீசுதீந்திரர்

D.ஸ்ரீசுமதீந்திரர்


15.ஐஜி ஸ்வாமிகளின் அங்கிதம் என்ன?

A.கோபாலவிட்டலா

B.வரதகோபாலவிட்டலா

C.வாசுதேவ விட்டலா

D.தந்தெகோபாலவிட்டலா


16.பிரசன்னவேங்கட தாசர் யாருடைய அம்சமாக கருதப்படுகிறார்?  

A.நாரதர்

B.ருத்ரர்

C.இந்திரன்

D.பாண்டு


17.22 ஸ்லோகங்களைக் கொண்ட ஜகன்னாததாச ஸ்தோத்திரத்தை இயற்றியவர்?

A.குருஜகன்னாத விட்டலா

B.ஸ்ரீதவிட்டலா

C.பிராணேஷ விட்டலா  

D.நரசிம்ம விட்டலா


18.ஸ்ரீராகவேந்திரர் ஆசிரமம் ஏற்றுக்கொண்ட தினம்?

A.பால்குண சுத்த த்விதியை

B.பால்குண பகுள த்விதியை

C.சிராவண பகுள த்விதியை

D.சிராவண சுத்த த்விதியை


19. வெங்கடரமணாசார்யரே பிறகு..

A.மாதனூர் விஷ்ணு தீர்த்தர்

B.வியாச தத்வக்ஞ தீர்த்தர்

C.புவனேந்திர தீர்த்தர்

D.சத்யவர தீர்த்தர்


20.ஜகன்னாததாசரின் இன்னொரு பெயர்?

A.சுளாதி தாசர்

B.ரங்கோலி தாசர்

C.ரங்க ஒலித தாசர்

D.B&C


21.ஸ்ரீராகவேந்திரரின் ஆசிரமகுரு?

A.சுதீந்திரர்

B.விஜயீந்திரர்

C.சுமதீந்திரர்

D.சுரேந்திரர்


22.எது நவ வித பக்தியில் சேர்ந்ததில்லை?

A.ஸ்மரணம்

B.கீர்த்தனம்

C.குணம்

D.சக்யம்


23.ஜகன்னாததாசரின் மானச மூர்த்தி?

A.பதரீசன்

B.பாதராயண

C.ஜகன்னாத விட்டலா  

D.நரசிம்ம விட்டலா


24. ஸ்ரீராகவேந்திரர் பிறந்த இடம்?

A.மந்திராலயம்

B.புவனகிரி

C.கும்பகோணம்

D.தஞ்சாவுர்


25.இவர்களில் யார், பரம்பரையிலிருந்து வந்த குருவிடமிருந்து அங்கிதம் பெற்றார்?

A.புரந்தரதாசர்

B.விஜயதாசர்

C.ஜகன்னாததாசர்

D.கோபாலதாசர்

***





Wednesday, July 1, 2020

ஹரிதாச விஜயம் - ஜூலை இதழ் அப்டேட்


ஹரிதாச விஜயம் - ஜூலை இதழ் அப்டேட்

ஆஷாட சுத்த ஏகாதசி. இன்று ஸ்ரீஜகன்னாததாசரின் நேரடி சிஷ்யரான ஸ்ரீதவிட்டலரின் புண்ய தினம். அவருடைய உருவப் படத்தை அட்டையிலும், அவருடைய வாழ்க்கைச் சரிதத் தொடரின் முதல் பகுதியைக் கொண்டும் வரவேண்டிய ஹரிதாச விஜயம் ஜூலை இதழ் தாமதமாக வரவிருக்கிறது. 

Strict lockdownஆல், இன்றைய நிலவரப்படி, நம் printerகள் சென்னையில் ஜூலை 6ம் தேதியும், பெங்களூரில் 7ம் தேதியும்தான் மறுபடி திறக்கிறார்கள். அதன்படி, 9 அல்லது 10ம் தேதியே ஜூலை மாத இதழை தபாலில் சேர்க்க முடியும். ஸ்ரீஹரியின் ப்ரேரணை இருந்தால், மேலும் தாமதம் ஆகாமல் ஜூலை இதழ் வரலாம்.

https://hks-bhavaprakashike.blogspot.com/
ஹரிகதாம்ருதசார உரையான பாவபிரகாசிகையின் தமிழ் மொழிபெயர்ப்பு தற்போது ஒரு நாளைக்கு 5 பத்யங்கள் என வந்துகொண்டிருக்கிறது. இந்த சாதுர்மாத பர்வ காலத்தில் விருப்பமுள்ளவர்கள் இதை படிக்கலாம். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

Saturday, May 16, 2020

ஹரிதாச விஜயம் - மே 16ம் தேதியின் அப்டேட்

ஹரிதாச விஜயம் - மே 16ம் தேதியின் அப்டேட்

கே: மார்ச் மாத இதழே எனக்கு வரவில்லை.
ப: மே 25ம் தேதி வாக்கில் ஒரு முறை நினைவுபடுத்துங்கள். தபால் சேவை சரியாகிவிடும் பட்சத்தில், இன்னொரு முறை இதை அனுப்புகிறோம். 

கே: ஏப்ரல் இதழ் எனக்கு வரவில்லை.
ப: ஏப்ரல் இதழை, மார்ச் 25க்குப் பின் தபாலில் சேர்க்க முடியவில்லை. மே 18 முதலே பிற நகரங்களுக்கான தபால் சேவை தொடங்கும் போலத் தெரிகிறது. இதழ் தயாராக உள்ளது. சேவை தொடங்கியதும் தபாலில் சேர்க்கப்படும். அது என்றைக்கு என்று தற்போது சொல்ல முடியவில்லை. 

கே: மே இதழ்?
ப: மே மாத இதழ் அச்சிடப்படவில்லை. 

கே: ஜூன் இதழ்?
ப: அச்சிடுவதற்கு நாம் பிற அச்சகங்களை நம்பியிருப்பதால், அவர்களும் இந்த வாரம்தான் தங்கள் வேலையை துவக்கவிருப்பதால், ஜூன் மாத இதழ் தாமதமாக வர வாய்ப்பிருக்கிறது. 

கே: மே/ஜூன் இதழ்கள் சேர்ந்து வருமா?
ப: அடுத்த வாரம்தான் அதுவும் தெரியவரும். நிலைமை சரியாகிவிட்டால், ஜூன் இதழ் வந்துவிடும். மே இதழ் வரவில்லையெனில், சந்தா காலத்தை ஒரு மாதம் நீட்டி அட்ஜஸ்ட் செய்யலாம். 

கே: நம் தெருவில் தபால் டெலிவரி ஆகிறதே?
ப: ஆகலாம். எல்லா மாநிலங்களிலும் / எல்லா ஏரியாக்களிலும் ஆகிறது என்று சொல்வதற்கில்லை. 

கே: பிற பத்திரிக்கைகளின் ஏப்ரல் மாத இதழ் வந்ததே?
ப: மார்ச் 25க்குள் தபாலில் சேர்க்கப்பட்டவை, தாமதமாக டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னரே, நமது ஏப்ரல் இதழ் தயாரானதால், தபாலில் சேர்க்க முடியவில்லை. 

வேறு கேள்விகள் இருந்தால், மெயில் / வாட்சப்பில் கேட்கவும். 

நாஹம் கர்தா ஹரி: கர்தா:
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
8904458276

***

Monday, April 13, 2020

ஹரிதாச விஜயம் - Lockdown Update

ஹரே ஸ்ரீனிவாஸா!

Update from ஹரிதாச விஜயம் மாத இதழ்:

1. March 2020 issue: யாருக்கேனும் வரவில்லையெனில் தெரிவிக்கவும்.

2. April 2020 issue: இந்த இதழ் புத்தகமாக அச்சிட்டாலும், யாருக்கும் அனுப்ப முடியவில்லை. Lockdown முடிந்தவுடன் இந்த இதழ் தபாலில் அனுப்பப்படும். eBook/PDF லிங்க் அனுப்பினோம். அதைப் அனைவரும் படித்திருக்கலாம். இங்கு download செய்து படிக்கலாம் -> https://archive.org/details/hv-apr2020

3. May 2020 issue: பெங்களூரில் April 30வரை Lockdown இருக்கும் என்று தற்போதைக்கு தெரிவதால், அதன் பிறகே புத்தகம் அச்சிடமுடியும். இந்த இதழுக்குத் தேவையான பதிவுகள் வருவதற்கும் தாமதம் ஆவதால், eBook/PDFம் வரப்போவதில்லை. Lockdown முடிந்தவுடன் புத்தகம் அச்சிட்டு, அனுப்பப்படும்.

அதுவரை, ஹரிகதாம்ருதசாரம் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம். தினம் 2 பத்யம் வந்துகொண்டிருக்கிறது.
https://hks-bhavaprakashike.blogspot.com/

இதுவே தற்போதைய நிலை. May 1-2 தேதியில் அன்றைய சூழ்நிலையைப் பொறுத்து அடுத்த update அனுப்புகிறோம்.

அனைவரும் வீட்டிலேயே இருந்து, அவரவருக்கேற்ப பகவத் சாதனைகளை செய்து, இந்த நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வோம். #StayHomeStaySafe.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***

Sunday, March 22, 2020

Haridasa Vijayam - Read Online

ஹரிதாச விஜயம் - ஏப்ரல் 2020 - இணையத்தில் படிக்க

ஹரிபக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஹரிதாச விஜயம் மாத இதழ் இந்த மாதத்திலிருந்து இணையத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.



ஹரிதாச விஜயம் - ஆன்லைனில் படிக்க

* ‘Readwhere' Android/iPhone appனை Download செய்யவும்
* Search Boxல் 'Haridasa Vijayam' என்று தேடவும்.
* Searchல் வரவில்லையெனில், Menuவில் ‘Sort by Low price' அல்லது 'Sort by Recently published' என்று தேடவும்.
* தனி இதழ் விலை ரூ.10 & 1 ஆண்டு மின்னிதழ் சந்தா : ரூ.100
* அங்கேயே ‘Subscribe' க்ளிக் செய்து, பணத்தைக் கட்டவும்.
* மாதாமாதம் Readwhere appல் ‘Shelf'ல் புது இதழ், பிரதி 25ம் தேதி வெளியாகும்.
* eBook சந்தா பணத்தை எங்களுக்கு அனுப்பக்கூடாது.

காகித-புத்தக-சந்தா கட்டியவர்களும், இந்த App இதழுக்கு சந்தா செலுத்தி, எவ்வித தபால் தாமதம் இல்லாமல் படிக்கலாம்.

உங்கள் க்ரூப்களில் இருப்பவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தவும்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

ந அஹம் கர்தா ஹரி: கர்தா.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

’ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
89044 58276 haridasa.vijayam@gmail.com

Wednesday, February 19, 2020

இரு புதிய தமிழ்ப் புத்தகங்கள் வெளியீடு

Two New Tamil Books to be published
1. Sri Vadirajaru's Swapnapadha with meanings
2. Sri Mohanadasaru's Kolu Haadu with meanings

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ்
இரு புதிய தமிழ்ப் புத்தகங்கள் வெளியீடு

1. ஸ்ரீவாதிராஜரின் ஸ்வப்னபத (அர்த்தங்களுடன்) : ஷட்பதியில் 45 பத்யங்களைக் கொண்ட இந்த அற்புத கிரந்தம், ஸ்ரீவாதிராஜருக்கு, ஹயவதன நாமக பரமாத்மன் அவரது கனவில் உபதேசித்த கிரந்தமாகும். பக்கங்கள்: 120 விலை: ரூ.70.

2. ஸ்ரீமோகனதாசரின் கோலுஹாடு (அர்த்தங்களுடன்) : நான்கு வரிகளைக் கொண்ட 217 பத்யங்களாலான அருமையான கிரந்தம். மகாபாரதம் அஸ்வமேத பர்வத்தில் வரும் ஒரு சுவையான சம்பவத்தை விளக்கும் கிரந்தம். பக்கங்கள்:120 விலை: ரூ.70.

இரு புத்தகங்களும் தாவணகெரெ திரு.பீமராவ் அவர்களின் கன்னட உரையை அனுசரித்து தமிழில் ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணால் எழுதப்பட்டதாகும்.

1 set புத்தகங்களுக்கு தபால் செலவு ரூ.20 சேர்த்து அனுப்பவும்.

புத்தகங்கள் வேண்டுவோர் அதற்கான தொகையை வங்கிக் கணக்கில் கட்டிவிட்டு, haridasa.vijayam@gmail.com அல்லது 8904458276 க்கு விவரத்தையும், உங்கள் முகவரியையும் தெரியப்படுத்தவும்.

வங்கிக் கணக்கு விபரம்:
Sathya Narayanan
ICICI Bank
Savings acc. 000-1010-43177
Cenotaph Road Branch
Chennai
IFSC : ICIC0000001

UPIல் அனுப்புவதற்கு தொலைபேசி எண் : 89044 58276 பயன்படுத்தவும்.

***

Sunday, January 12, 2020

ஹரிகதாம்ருதசாரம் - தமிழில்



சுமார் 1920ம் ஆண்டில், ஸ்ரீபத்பனாப தாசர் என்பவர், ஹரிகதாம்ருதசாரத்திற்கு ‘பாவபிரகாசிகை’ என்ற தலைப்பில், கன்னடத்தில் ஒரு உரை (வ்யாக்யானம்)  எழுதினார். ஸ்ரீபரமப்ரிய சுப்பராய தாசரின் வேண்டுகோளின்படி எழுதப்பட்ட இந்த உரைக்கு, அன்றைய காலத்தில் ஸ்ரீசத்யத்யான தீர்த்தர் ஆசி வழங்கியுள்ளார். பின் வந்த அனேக பண்டிதர்கள் இதை ஒரு அற்புத உரை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்த உரையின் மொழிபெயர்ப்பை https://hks-bhavaprakashike.blogspot.in என்னும் இணையதளத்தில், குருகளின் அருளால் தினம் ஒரு ஸ்லோகமாக வெளியிட உள்ளோம். முன்னுரைகள், சந்தியின் நோக்கம், ஸ்லோகங்கள் என தொடர்ந்து 1000+ நாட்களுக்கு பதிவுகள் இடவேண்டும் என்பது திட்டம். துவக்கத் தேதி : ஸ்ரீகோபாலதாசரின் புண்ய தினமான 18-ஜனவரி-20.

ஹரிகதாம்ருதசாரம் படிக்கும் / அதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இதை தெரியப்படுத்தவும். தினந்தோறும் மேற்சொன்ன இணையதளத்திற்குச் சென்று அன்றைய ஸ்லோகத்தையும், அதற்கான தாசரின் விளக்கங்களையும் படிக்கவும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து


***

2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...