Thursday, June 18, 2026

ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம்

 ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ்

பெங்களூரு


18.06.2026


ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம்


ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால், இன்றோடு நமது குரு எனக்கு அங்கித உபதேசம் செய்து சரியாக 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஹரிதாஸ பரம்பரையில் அங்கித உபதேசம் அளிக்கும்போது, குருவானவர், ஸிஷ்யருக்குக் கொடுக்கவிருக்கும் அங்கித-உபாஸ்ய மூர்த்தியின் பெயரில் ஒரு தேவரநாமா இயற்றி, அதனை ஸிஷ்யருக்கு அளித்து, அங்கித நாமத்தை உபதேசம் செய்வது வழக்கம். அப்படி எனக்கு நம் குரு அளித்த தேவரநாமா இங்கு உள்ளது. கன்னடம் & ஆங்கிலத்தில்.




எனது அங்கித உபதேச குரு:


பெயர் : ஹரதி ப்ரஹ்லாதாசார்யார்.

முன்னர்: ஸ்ரீஜாம்பவதிப்ரிய விட்டல தாஸர்.

தற்போது: ஸ்ரீஹரிப்ரிய தீர்த்தர். 


ஹரிதாஸ ஸாஹித்ய பரம்பரை (இரண்டாம் கட்டம்) என்பது ஸ்ரீவிஜயதாஸரில் துவங்கி, பல கிளைகளாக விரிந்து, இன்று வரை வந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். நமது குருவும் ஸ்ரீவிஜயதாஸரின் பரம்பரையில் வந்தவரே. அவரது குரு பரம்பரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இதே பரம்பரையில் வந்து, நம் யோக்யதைக்கேற்ப ஹரிதாஸ ஸாஹித்ய / மத்வ ஸித்தாந்த சேவை செய்து கொண்டிருப்பது, இந்த பரம்பரையில் வந்த அனைத்து குருகளின் அருளாலேயே என்பதில் சந்தேகம் இல்லை. 


ஸ்ரீவிஜயதாஸர்

ஸ்ரீவேணுகோபால விட்டலதாஸர்

ஸ்ரீவ்யாஸ விட்டலர்

ஸ்ரீரகுபதி விட்டலர்

ஸ்ரீபூவராஹ ரகுபதி விட்டலதாஸர்

ஸ்ரீஸ்ரீபதி விட்டலர்

ஸ்ரீதந்தெ ஸ்ரீபதி விட்டலதாஸர்

ஸ்ரீநிதி விட்டலதாஸர்

ஸ்ரீவர விட்டலதாஸர்

ஸ்ரீமுத்துமோகன விட்டலதாஸர்

ஸ்ரீதந்தெமுத்து மோகன விட்டலதாஸர்

ஸ்ரீகுருகோவிந்த விட்டலதாஸர்

ஸ்ரீஜாம்பவதிப்ரிய விட்டலதாஸர்

ஸ்ரீஜகன்னாத கேசவ


அங்கிதம் என்றால் என்ன?. இதைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு. 


அங்கிதவில்லத தேஹ நிஷித்தவு

அங்கிதவில்லத காவ்ய ஶோபிஸுது

அங்கிதவில்லதெ இரபாரதெந்து

சக்ராங்கிதவனு மாடி என்னங்ககெ

பங்கஜனாப ஸ்ரீபுரந்தரவிட்டலன

அங்கிதவெனகித்த குருவ்யாஸ முனிராய || -- ஸ்ரீபுரந்தரதாஸர்


தத்வ ஶாஸ்திர உலகில், குரு-ஸிஷ்ய பரம்பரையைப் பற்றி கேள்விப்படுகிறோம். இதன் அங்கமான ஹரிதாஸ ஸாஹித்யத்தில், ஹரிதாஸர் என்று அழைத்துக் கொண்டவர்களின் நடவடிக்கைகள் தனித்துவமானவை. தீக்ஷை வாங்கிய ஹரிதாஸர்கள் அங்கிதம் பெற்று தங்கள் வேலைகளை தொடர்கின்றனர். இதற்கு முழுமுதற் காரணமானவர் ஸ்ரீமதாசார்யரே என்று அவரது த்வாதஶ ஸ்தோத்திரத்திலிருந்து தெரிகிறது. ‘ஆனந்ததீர்த்த’ என்னும் அங்கிதம் கொண்ட ஸ்தோத்திரங்களைப் போல, ஹரிதாஸர்கள் தங்கள் க்ருதிகளில் தங்கள் குரு அருளிக் கொடுத்த அங்கிதத்தை பயன்படுத்தியிருப்பதை காண்கிறோம். ஸ்ரீவிஜயதாஸர் கூறும்போது:


மனுஜரிகங்கிதவு ஶாந்தியு இல்லதலெ

அனுவாகி பேள்த தத்வகளு வ்யர்த்த காணோ || என்றார்.


படைப்பிற்கு வந்த ஒவ்வொரு ஜீவனும் அங்கிதனே (நாமதேயம் உள்ளவன்). ஆனாலும் பகவத் பக்தனாதவன் எப்படி கோபிசந்தனம், முத்திரை, தப்தமுத்ரா தாரணம் இவற்றை தரிக்கிறானோ, அப்படி ஹரிதாஸர்கள் விஸேஷ அங்கித (முத்ரிகா) கொண்டவர்கள். ஸ்ரீஹரியின் பெயரான அங்கிதம் அவர்களின் பிம்பமூர்த்தியின் பெயர். குருவானவர் ஸிஷ்யரின் உத்தாரத்திற்காக (மேம்பாட்டிற்காக) கொடுத்த பெயர். இது ஸ்ரீஹரியின் ப்ரியத்திற்காக என்று அறியவேண்டும். இது ஸ்ரீநரஹரி தீர்த்தரிடமிருந்து துவங்கி இன்றுவரை வந்துகொண்டிருக்கும் வழக்கம். ஸ்ரீவிஜயதாஸர் தமது ஸுளாதியில் அங்கிதத்தைப் பற்றி சொல்வது:


ஸ்ரீனிவாசன பாதவனருஹ தோரபஹுது நம்பிதவரிகெ

வனஜனாபன பாத துதிபந்த ஶக்திகெ

கனபத ரூபதங்கிதவ கொட்டு மத்தானுனயதி ஶாந்தி பேளிஸி தத்வகள

மனதிந்தலேயபஹுது ஸுகுணரிகெ || -- ஸ்ரீவிஜயதாஸர்


தீக்ஷையைப் பற்றி ஸ்ரீபுரந்தரதாசர் சொல்வதாவது:


வனஜ பவாண்டதொளு ஹரிதாஸத்வ தீக்ஷெ

பலுகஷ்ட கஷ்டவெந்து காணோ

மனுஜாதமகெ இது ஸுலபவல்லவு ப்ராணி ||


ஹரிதாஸ தீக்ஷையின் ஒரு அங்கமே அங்கிதம் வாங்குதல். இது ஸ்ரீஹரியின் தாஸானு தாஸன் என்று நிரூபிக்கும் செயலாகும். 


ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.


‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

பெங்களூரு

8904458276

***


ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம்

 ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ் பெங்களூரு 18.06.2026 ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால், இன்றோடு நமது குரு எனக்கு...