Saturday, May 16, 2020

ஹரிதாச விஜயம் - மே 16ம் தேதியின் அப்டேட்

ஹரிதாச விஜயம் - மே 16ம் தேதியின் அப்டேட்

கே: மார்ச் மாத இதழே எனக்கு வரவில்லை.
ப: மே 25ம் தேதி வாக்கில் ஒரு முறை நினைவுபடுத்துங்கள். தபால் சேவை சரியாகிவிடும் பட்சத்தில், இன்னொரு முறை இதை அனுப்புகிறோம். 

கே: ஏப்ரல் இதழ் எனக்கு வரவில்லை.
ப: ஏப்ரல் இதழை, மார்ச் 25க்குப் பின் தபாலில் சேர்க்க முடியவில்லை. மே 18 முதலே பிற நகரங்களுக்கான தபால் சேவை தொடங்கும் போலத் தெரிகிறது. இதழ் தயாராக உள்ளது. சேவை தொடங்கியதும் தபாலில் சேர்க்கப்படும். அது என்றைக்கு என்று தற்போது சொல்ல முடியவில்லை. 

கே: மே இதழ்?
ப: மே மாத இதழ் அச்சிடப்படவில்லை. 

கே: ஜூன் இதழ்?
ப: அச்சிடுவதற்கு நாம் பிற அச்சகங்களை நம்பியிருப்பதால், அவர்களும் இந்த வாரம்தான் தங்கள் வேலையை துவக்கவிருப்பதால், ஜூன் மாத இதழ் தாமதமாக வர வாய்ப்பிருக்கிறது. 

கே: மே/ஜூன் இதழ்கள் சேர்ந்து வருமா?
ப: அடுத்த வாரம்தான் அதுவும் தெரியவரும். நிலைமை சரியாகிவிட்டால், ஜூன் இதழ் வந்துவிடும். மே இதழ் வரவில்லையெனில், சந்தா காலத்தை ஒரு மாதம் நீட்டி அட்ஜஸ்ட் செய்யலாம். 

கே: நம் தெருவில் தபால் டெலிவரி ஆகிறதே?
ப: ஆகலாம். எல்லா மாநிலங்களிலும் / எல்லா ஏரியாக்களிலும் ஆகிறது என்று சொல்வதற்கில்லை. 

கே: பிற பத்திரிக்கைகளின் ஏப்ரல் மாத இதழ் வந்ததே?
ப: மார்ச் 25க்குள் தபாலில் சேர்க்கப்பட்டவை, தாமதமாக டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னரே, நமது ஏப்ரல் இதழ் தயாரானதால், தபாலில் சேர்க்க முடியவில்லை. 

வேறு கேள்விகள் இருந்தால், மெயில் / வாட்சப்பில் கேட்கவும். 

நாஹம் கர்தா ஹரி: கர்தா:
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
8904458276

***

1 comment:

ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம்

 ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ் பெங்களூரு 18.06.2026 ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால், இன்றோடு நமது குரு எனக்கு...