Friday, December 25, 2020

ஹரிதாச விஜயம் - டிசம்பர் 2020 அப்டேட்ஸ்

 ஹரிதாச விஜயம் - டிசம்பர் 2020 அப்டேட்ஸ்

1. ஜனவரி 2021 ஹரிதாச விஜயம் இதழ் தபாலில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதனை ஆன்லைனில் படிக்க இங்கு க்ளிக்கவும். 

https://tinyurl.com/ydypvalj

2. டிசம்பர் 2020 மாதத்தின் இலவச ஈ-புத்தகம்:

ஜாம்பவதிப்ரிய விட்டலதாசரின் கட்டுரைகள்: தமிழில்:

https://archive.org/details/jpv-tamil

3. இதுவரை வந்த அனைத்து இலவச ஈ-புத்தகங்களையும் இங்கு பார்த்து, டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

https://archive.org/details/@sathya_narayanan

4. கீழ்க்கண்ட புதிய புத்தகங்களை வாங்கி ஆதரவு தரவும். இதனால் மேலும் பற்பல புத்தகங்கள் வருவதற்கு உதவியாக இருக்கும். 

அ. மத்வநாமா (தமிழில் - அர்த்தத்துடன்). தக்க ஆதாரங்களுடன் மிகவும் விளக்கமாக 250 பக்கங்கள் கொண்ட புத்தகம். ரூ.100.

ஆ. நாராயண பஞ்சர - ஸ்ரீபிரசன்னவெங்கட தாசரின் கிருதி. ரூ.50. 

மற்றும்

இ. ஸ்ரீவித்யா பிரசன்ன தீர்த்தரின் கட்டுரைகள் & நாடகங்கள். 200 பக்கங்கள் ரூ.80

இந்த இரு புத்தகங்களையும் வாங்குவதற்கு தொடர்பு கொள்ளவும்: சந்திரிகா பிரகாஷன. தொலைபேசி: 90437-47036.

ஈ. 30 புத்தகங்களைக் கொண்ட விரத புத்தக செட். அனைத்து விரதங்களின் பூஜா விதானம், ஸ்தோத்திரங்கள், கன்னட கிருதிகள், சமையல்கள் இவற்றுடன் அந்த விரத்தைப் பற்றிய - ஏன், எதற்கு, எப்படி, எப்போது - போன்ற பல அபூர்வ தகவல்கள், தக்க ஆதாரங்களுடன் நிறைந்த புத்தகங்கள். 3500+ பக்கங்களைக் கொண்டது. தற்போது முன்பதிவு செய்ய: ரூ2000+250. புத்தக வெளியீடு: மத்வநவமியன்று. 21.2.2021. முன்பதிவு செய்ய: www.jagadgurusrimadhvacharya.com சென்று அங்கு பணம் செலுத்தவும். 

நன்றி.

ஹரே ஸ்ரீனிவாசா

சத்ய நாராயணன்

8904458276

haridasa.vijayam@gmail.com

Saturday, November 21, 2020

ஹரிதாச விஜயம் - நவம்பர் 2020 அப்டேட்ஸ்

ஹரிதாச விஜயம் - நவம்பர் 2020 அப்டேட்ஸ்

1. டிசம்பர் 2020 ஹரிதாச விஜயம் இதழ் இன்று தபாலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக ஆன்லைனில் படிக்க இங்கு க்ளிக்கவும். 

https://tinyurl.com/yyfre9xm

2. நவம்பர் 2020க்கான இலவச தமிழ் ஈ-புக்:

ஸ்ரீசத்யவீர தீர்த்தர். (மிருத்திகா பிருந்தாவனம் @ சத்யவிஜயநகரம். ஆராதனை நாள்: 24-11-2020).

https://archive.org/details/sri-sathyaveera-theertharu


3. அடியேன் மொழிபெயர்ப்பில் மத்வநாமா வெளியாகி உள்ளது. இதனை வாங்குவதற்கு : ஸ்ரீஹயவதன சேவா சமிதி - தொடர்பு கொள்ளவும். Contact details attached. (என்னிடம் இதன் பிரதிகள் இல்லை).


4. அடியேன் மொழிபெயர்ப்பில் நாராயண பஞ்சர வெளியாகி உள்ளது. இதனை வாங்குவதற்கு: சந்திரிகா பிரகாஷன - தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்: 90437-47036 (என்னிடம் இதன் பிரதிகள் இல்லை).

5. 30-புத்தக-செட். தமிழ் விரதங்கள் / பண்டிகைகள் / ஹரிதினங்கள்:

கன்னடத்தில் வெளியாகி பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ள இந்த 30-புத்தக-செட்டினை, ஸ்ரீஹரியின் அருளால், அடியேன் தமிழில் தற்போது மொழிபெயர்த்து வருகிறேன்.  வெளியீடு 21-2-2021 (ஸ்ரீமத்வநவமி) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. (30 புத்தக பட்டியல் கீழே உள்ளது). மேலதிக தகவல்களுக்கு இந்த யூட்யூப் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும். இதில் பல அறிமுக வீடியோக்கள் இதில் வருகின்றன.

https://www.youtube.com/channel/UCuB6UUt-j_G8bMF-pa68ggA






ஹரே ஸ்ரீனிவாசா

சத்ய நாராயணன்

8904458276

haridasa.vijayam@gmail.com


Tuesday, October 27, 2020

ஹரிதாச விஜயம் - அக்டோபர் 2020 அப்டேட்ஸ்

ஹரிதாச விஜயம் - அக்டோபர் 2020 அப்டேட்ஸ்

1. மாதம் ஒரு இலவச தமிழ் ஈ-புக்:

இந்த லிங்க்ல் சென்று இதுவரை வந்த ஈ-புக்’களை டவுன்லோட் செய்து கொள்ளவும். 

http://jagannathakesava.blogspot.com/2020/10/blog-post.html

2. நவம்பர்2020 இதழ்:

எவ்வளவோ திட்டமிட்டும், நவம்பர் இதழை முன்கூட்டியே தபாலில் சேர்க்க முடியவில்லை. நவராத்திரி விடுமுறைகளால் இந்த இதழ் தாமதமாகி, 29 அல்லது 30ம் தேதிதான் தபாலில் சேர்க்கப் போகிறோம். 

3. 30-புத்தக-செட். தமிழ் விரதங்கள் / பண்டிகைகள் / ஹரிதினங்கள்:

கன்னடத்தில் வெளியாகி பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ள இந்த 30-புத்தக-செட்டினை, ஸ்ரீஹரியின் அருளால், அடியேன் தமிழில் தற்போது மொழிபெயர்த்து வருகிறேன்.  வெளியீடு 21-2-2021 (ஸ்ரீமத்வநவமி) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய ஒரு அறிமுகம் கொடுப்பவர், இதனை கன்னடத்தில் தொகுத்த: திரு.பெம்மத்தி வெங்கடேஷாச்சார் அவர்கள்.  (30 புத்தக பட்டியல் கீழே உள்ளது).

https://drive.google.com/file/d/15xtR7q0lKkNyQnf-9feHH8dpJRde_IXQ/view?usp=sharing

4. மத்வநாமா - தமிழ் புத்தகம் வெளியீடு.

ஸ்ரீஹரியின் கருணையால், அடியேனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மத்வநாமா புத்தகம், கோவை சிங்காநல்லூர் ஸ்ரீஹயவதன சேவா சமிதி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகம் உங்களுக்கு வேண்டுமெனில், அவர்களை தொடர்பு கொள்ளலாம். (என்னிடம் இப்புத்தகத்தின் பிரதிகள் விற்பனைக்கு இல்லை). See attached images.

ஹரே ஸ்ரீனிவாஸா

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

8904458276

***





Friday, October 2, 2020

மாதம் ஒரு இலவச தமிழ் ஈ-புக்

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு

8904458276. haridasa.vijayam@gmail.com

மாதம் ஒரு இலவச தமிழ் ஈ-புக் (Free PDF)

கீழ்க்கண்ட லிங்க்களிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

****

நடந்து கொண்டிருக்கும் அதிக ஆஸ்விஜ மாதத்தில் புத்தக தானம் செய்ய, புத்தகங்களை 50% தள்ளுபடியில் வாங்குவதற்கு, தொடர்பு கொள்ளவும். ஹரே ஸ்ரீனிவாசா.

****

1. June2020:

கன்னட ஹரிதாச பாடல்களின் தமிழ் விளக்கங்கள்

https://archive.org/details/dasar-songs-compile-2.0


2. July2020:

ஹரிகதாம்ருதசாரம் - மூலம் மட்டும்

https://archive.org/details/hks-moolam-tamil-1.0


3. August2020:

ஹரிகதாம்ருதசாரம் - பாவபிரகாசிகை உரையுடன்

https://archive.org/details/bhava-prakashike-hks-commentary-tamil-translation-1.0


4. September2020:

ஸ்ரீபிரசன்னவெங்கடதாசரின் - நாராயண பஞ்சர

https://archive.org/details/narayana-panjara-1.0


(தமிழகத்தைச் சேர்ந்த) அறியப்படாத ஹரிதாசர் - ஸ்ரீநரஹரி தாசர்

https://archive.org/details/narahari-dasaru-tamil


5. October2020:

இந்தா குருகள காணேனோ - ஸ்ரீசத்யபிரமோத தீர்த்தரைப் பற்றிய ஒரு தீர்க்க க்ருதி - தமிழ் அர்த்தத்துடன்

https://archive.org/details/intha-gurugala-kaneno-1.0


***


Wednesday, September 2, 2020

செப்டம்பர்2020 - ஹரிதாசர்களைப் பற்றிய கேள்வி பதில் போட்டி

 * ஹரிதாசர்களைக் குறித்த மாதாந்திர கேள்வி பதில் போட்டி -2.

* சென்ற மாதத்தின் விடைகள் இங்கே உள்ளது. விடைகளை அனுப்பி புத்தகப் பரிசு பெற்றவர்கள் ஐந்து பேர்.

* கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதி செப்டம்பர் 25ம் தேதிக்குள் : 8904458276 எண்ணிற்கு வாட்சப் அல்லது haridasa.vijayam@gmail.com க்கு ஈமெயில், அனுப்பலாம். 

* செப்டம்பர்/அக்டோபர்2020 மாதங்களில் ஆராதனை / புண்ய தினம் கொண்டவர்களைப் பற்றியும் + சில பொதுவான கேள்விகளும் உள்ளன.

* சரியான விடைகள் அனுப்புபவர்களுக்கு புத்தகப் பரிசு உண்டு.

* இதை உங்கள் க்ரூப்களில் ஷேர் செய்து, அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். --- 

** FROM ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு.

***

1. இவர்களில் யார் கனவில் அங்கிதம் பெற்றார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C ஜகன்னாததாசர்

D கோபாலதாசர்

2. பாகேபல்லி சேஷதாசர் யாரிடமிருந்து அங்கிதம் வாங்கினார்?

A ஸ்ரீநிதி விட்டலர்

B ஸ்ரீவர விட்டலர்

C தந்தெமுத்துமோகன தாசர்

D முத்துமோகன தாசர்

3. 15/16ம் நூற்றாண்டில் ஹரிதாசர்களின் தலைமையிடம்?

A ஹம்பி

B மந்திராலயம்

C ராய்ச்சூர்

D திருப்பதி

4. த்வைத சித்தாந்தத்தைப் பற்றி அதிக தகவல்கள் தரும் கிரந்தம்?

A மணிமஞ்சரி

B தத்வபிரதீபா

C மத்வ விஜய

D பிரம்ம சூத்ர

5. ப்ராணேச தாசருக்கு சமகால யதிகள்?

A சத்யதர்ம தீர்

B சத்யபோத தீர்

C புவனேந்திர தீர்

D A&B

6. இவர்களில் யார் ஸ்ரீஹரியிடமிருந்து நேரடியாக அங்கிதம் பெற்றார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C ஜகன்னாததாசர்

D கோபாலதாசர்

7. ஹரிதாசர்கள் முக்தியடைய எந்த வழியை பின்பற்றினர்?

A கர்ம மார்க்கம்

B ஞான மார்க்கம்

C யோக மார்க்கம்

Dபக்தி மார்க்கம்

8. மத்வருக்கு முன் எவ்வளவு பாஷ்யகாரர்கள் இருந்தனர்?

A 12

B 24

C 21

D 18

9. ஜலஜேஷ்ட நிபாகாரம்.. _ குரும் பஜே

A புரந்தர

B விஜய

C ஜகன்னாத

D கோபால

10. இவற்றில் எது சப்த (7) தாளத்திற்கு உட்பட்டது?

A கீர்த்தனை

B உகாபோகம்

C சுளாதி

D மற்றவை

11. ஐஜி வெங்கட் ராமாசார்யரின் அங்கிதம்?

A கோபாலவிட்டலா

B வரதகோபாலவிட்டலா

C குருகோபாலவிட்டலா

D வாசுதேவ விட்டலா

12. கலியுகத்தில் மோட்சத்திற்கு என்ன செய்யவேண்டும் என்கிறார் ஸ்ரீபாதராஜர்?

A தியானம்

B யக்ஞம்

C அர்ச்சனை

D கீர்த்தனை

13. இவர்களில் யார் அங்கிதம் தானே வைத்துக் கொண்டார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C கனகதாசர்

D கோபாலதாசர்

14. பிராணேச தாசரின் சொந்த ஊர்?

A பாகல்கோட்

B கர்ஜிகி

C காகிண்டிகி

D லிங்கசுகுர்

15. எந்த ஹரிதாசருக்கு பிருந்தாவனம் உள்ளது?

A ஜகன்னாத தாசர்

B கோபாலதாசர்

C மஹிபதி தாசர்

D பிரசன்னவேங்கட தாசர்

16. லம்போதர, கெரெய நீரனு - இவை __ என்று அழைக்கப்படுகின்றன.  

A பிள்ளரி கீதே

B லக்‌ஷ்ய கீதெ

C லக்‌ஷண கீதெ

D மேற்கூறிய அனைத்தும்

17. ஜகன்னாததாசர் அங்கிதம் வாங்கிய இடம்

A பண்டரிபுரம்

B மான்வி

C திருப்பதி

D உடுப்பி

18. 17/18ம் நூற்றாண்டில் ஹரிதாசர்களின் தலைமையிடம்?

A ஹம்பி

B மந்திராலயம்

C ராய்ச்சூர்

D திருப்பதி

19. நாராயண கதா எனப்படுவது எது?

A ராமாயணம்

B பாகவதம்

C மகாபாரதம்

D பிரம்ம சூத்ர

20. அங்கிதம் என்றால்?

A கையெழுத்து-பெயர்

B பிம்பரூபி பரமாத்மா  

C புனைபெயர்

D மேற்கூறிய அனைத்தும்

21. நம: ஸ்ரீபாதராஜாய நமஸ்தே __ யோகினே

A விஜய

B ஜகன்னாத

C கோபால

D வியாச

22. எந்த ராயர் மடத்து ஸ்வாமிகளின் அனுக்கிரத்தை ஜகன்னாததாசர் பெற்றிருந்தார்?

A வசுதேந்திர தீர்த்தர்

B வரதேந்திர தீர்த்தர்

C இருவரும்

D இருவரும் இல்லை

23. நவபிருந்தாவனத்தில் நடுவில் இருக்கும் பிருந்தாவனம் யாருடையது?

A வியாசராஜர்

B பத்பனாப தீர்த்தர்

C ராம தீர்த்தர்

D ஸ்ரீனிவாச தீர்த்தர்

24. ஜகன்னாததாசருக்கு 40 ஆண்டுகள் ஆயுள்தானம் கொடுத்தவர் யார்?

A மோகனதாசர்

B விஜயதாசர்

C கோபாலதாசர்

D வியாசவிட்டலா

25. பிராணேச தாசரின் இயற்பெயர்?

A யோகப்பா

B திருகப்பா  

C ஜகன்னாத

D ஸ்ரீனிவாச

***





Saturday, August 8, 2020

ஆகஸ்ட்2020 - ஹரிதாசர்களைப் பற்றிய கேள்வி பதில் போட்டி

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு


* ஹரிதாச விஜயம் மாத இதழில் வரும் ஹரிகதாம்ருதசார Crossword puzzle உடன் இன்னொரு மாதாந்திர போட்டியும் அறிவிப்பு.

* ஹரிதாசர்களைப் பற்றிய கேள்விகள். மாதம் ஒன்று. 

* ஆகஸ்ட்2020ல் ஆராதனை / புண்ய தினம் கொண்டவர்களைப் பற்றிய கேள்விகள்

* விடைகளை ஆகஸ்ட் 15க்குள் 8904458276க்கு வாட்சப் அல்லது haridasa.vijayam@gmail.comக்கு மெயிலில் அனுப்பவும்.

* சரியான விடைகள் அனுப்புபவர்களுக்கு புத்தகப் பரிசு உண்டு .

* இதை உங்கள் க்ரூப்களில் ஷேர் செய்து, அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

* மத்வ சித்தாந்த ஹரிதாசர்களைப் பற்றிய அரிய தகவல்களுடன் வரும் தமிழ் மாத இதழ் ஹரிதாச விஜயத்திற்கு subscribe செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹரே ஸ்ரீனிவாசா.


1. ஸ்ரீராகவேந்திரரின் இயற்பெயர்?

A.வெங்கண்ணா

B.வேணுகோபாலா

C.வெங்கடநாதா

D.வெங்கப்பா


2.பிரசன்னவேங்கட தாசரின் சொந்த ஊர்?

A.பாகல்கோடெ

B.கர்ஜிகி

C.காகிண்டிகி

D.ராய்ச்சூர்


3.ஜகன்னாததாசர் யாருடைய அம்சமாக கருதப்படுகிறார்?  

A.நாரதர்

B.ருத்ரர்

C.சஹ்லாத

D.பாண்டு


4.ராகவேந்திர விஜயம் இயற்றியவர்?

A.நாராயணாசார்ய

B.பண்டிதாசார்ய

C.குருராஜாசார்யர்

D.வாசுதேவாசார்யர்


5.ஸ்ரீராகவேந்திரரின் சமகாலத்திலேயே ராகவேந்திர விஜய கிரந்தம் எழுதப்பட்டது

A.சரி

B.தவறு

6.முதன்முதலில் கன்னடத்தில் தேவர நாமாக்களை இயற்றியவர்?

A.ஸ்ரீபாதராஜர்

B.ஸ்ரீவியாசராஜர்

C.ஸ்ரீ நரஹரி தீர்த்தர்

D.ஸ்ரீஜய தீர்த்தர்


7. ஹரிதாச சாகித்யத்தின் இன்னொரு பெயர்?

A.பக்தி சாகித்யம்

B.ஞான சாகித்யம்

C.வைராக்ய சாகித்யம்

D.சித்தாந்த சாகித்யம்


8.பிரசன்னவேங்கட தாசர் யாரிடமிருந்து அங்கிதம் பெற்றார்?

A.குருவிடமிருந்து

B.தனக்குதானே 

C.திருப்பதி வெங்கடாசலபதி

D.கனவில்


9. ஹரிதாச சாகித்யத்தின் நோக்கம்?

பக்தியை பரப்புதல்

த்வைத சித்தாந்த கருத்துகளை பரப்புதல்

ஸ்ரீஹரியின் நற்குணங்களை விளக்குதல்

மேற்கூறிய அனைத்தும்


10.அவரின் பெற்றோர் யாருக்கு சேவை செய்ததால், ஜகன்னாததாசர் பிறந்தார்?

A.திருப்பதி ஸ்ரீனிவாசன்

B.உடுப்பி கிருஷ்ணன்

C.மந்திராலய ராகவேந்திரர்

D.பண்டரிபுர விட்டலன்


11.ஸ்ரீராகவேந்திரருக்கு தரிசனம் கொடுத்து, சன்யாசம் ஏற்கும்படி சொன்னவர்?A.பாரதிதேவி

B.லட்சுமிதேவி

C.சரஸ்வதிதேவி

D.இவர்கள் அனைவரும்


12.ஹரிதாச சாகித்யம் எதனுடைய சாரம்?

A.வேத உபநிஷத்கள்

B.த்வைத சித்தாந்தம்

C.இதிகாச புராணங்கள்

D.மேற்கூறிய அனைத்தும்


13.ஜகன்னாததாசரின் இயற்பெயர்?  

A.நரசிம்ம

B.ஜகன்னாத

C.ஸ்ரீனிவாச

D.கோபால


14.ஸ்ரீராகவேந்திரருக்குப் பின் பட்டத்திற்கு வந்தவர் யார்?

A.ஸ்ரீயோகீந்திரர்

B.ஸ்ரீசூரேந்திரர்

C.ஸ்ரீசுதீந்திரர்

D.ஸ்ரீசுமதீந்திரர்


15.ஐஜி ஸ்வாமிகளின் அங்கிதம் என்ன?

A.கோபாலவிட்டலா

B.வரதகோபாலவிட்டலா

C.வாசுதேவ விட்டலா

D.தந்தெகோபாலவிட்டலா


16.பிரசன்னவேங்கட தாசர் யாருடைய அம்சமாக கருதப்படுகிறார்?  

A.நாரதர்

B.ருத்ரர்

C.இந்திரன்

D.பாண்டு


17.22 ஸ்லோகங்களைக் கொண்ட ஜகன்னாததாச ஸ்தோத்திரத்தை இயற்றியவர்?

A.குருஜகன்னாத விட்டலா

B.ஸ்ரீதவிட்டலா

C.பிராணேஷ விட்டலா  

D.நரசிம்ம விட்டலா


18.ஸ்ரீராகவேந்திரர் ஆசிரமம் ஏற்றுக்கொண்ட தினம்?

A.பால்குண சுத்த த்விதியை

B.பால்குண பகுள த்விதியை

C.சிராவண பகுள த்விதியை

D.சிராவண சுத்த த்விதியை


19. வெங்கடரமணாசார்யரே பிறகு..

A.மாதனூர் விஷ்ணு தீர்த்தர்

B.வியாச தத்வக்ஞ தீர்த்தர்

C.புவனேந்திர தீர்த்தர்

D.சத்யவர தீர்த்தர்


20.ஜகன்னாததாசரின் இன்னொரு பெயர்?

A.சுளாதி தாசர்

B.ரங்கோலி தாசர்

C.ரங்க ஒலித தாசர்

D.B&C


21.ஸ்ரீராகவேந்திரரின் ஆசிரமகுரு?

A.சுதீந்திரர்

B.விஜயீந்திரர்

C.சுமதீந்திரர்

D.சுரேந்திரர்


22.எது நவ வித பக்தியில் சேர்ந்ததில்லை?

A.ஸ்மரணம்

B.கீர்த்தனம்

C.குணம்

D.சக்யம்


23.ஜகன்னாததாசரின் மானச மூர்த்தி?

A.பதரீசன்

B.பாதராயண

C.ஜகன்னாத விட்டலா  

D.நரசிம்ம விட்டலா


24. ஸ்ரீராகவேந்திரர் பிறந்த இடம்?

A.மந்திராலயம்

B.புவனகிரி

C.கும்பகோணம்

D.தஞ்சாவுர்


25.இவர்களில் யார், பரம்பரையிலிருந்து வந்த குருவிடமிருந்து அங்கிதம் பெற்றார்?

A.புரந்தரதாசர்

B.விஜயதாசர்

C.ஜகன்னாததாசர்

D.கோபாலதாசர்

***





Wednesday, July 1, 2020

ஹரிதாச விஜயம் - ஜூலை இதழ் அப்டேட்


ஹரிதாச விஜயம் - ஜூலை இதழ் அப்டேட்

ஆஷாட சுத்த ஏகாதசி. இன்று ஸ்ரீஜகன்னாததாசரின் நேரடி சிஷ்யரான ஸ்ரீதவிட்டலரின் புண்ய தினம். அவருடைய உருவப் படத்தை அட்டையிலும், அவருடைய வாழ்க்கைச் சரிதத் தொடரின் முதல் பகுதியைக் கொண்டும் வரவேண்டிய ஹரிதாச விஜயம் ஜூலை இதழ் தாமதமாக வரவிருக்கிறது. 

Strict lockdownஆல், இன்றைய நிலவரப்படி, நம் printerகள் சென்னையில் ஜூலை 6ம் தேதியும், பெங்களூரில் 7ம் தேதியும்தான் மறுபடி திறக்கிறார்கள். அதன்படி, 9 அல்லது 10ம் தேதியே ஜூலை மாத இதழை தபாலில் சேர்க்க முடியும். ஸ்ரீஹரியின் ப்ரேரணை இருந்தால், மேலும் தாமதம் ஆகாமல் ஜூலை இதழ் வரலாம்.

https://hks-bhavaprakashike.blogspot.com/
ஹரிகதாம்ருதசார உரையான பாவபிரகாசிகையின் தமிழ் மொழிபெயர்ப்பு தற்போது ஒரு நாளைக்கு 5 பத்யங்கள் என வந்துகொண்டிருக்கிறது. இந்த சாதுர்மாத பர்வ காலத்தில் விருப்பமுள்ளவர்கள் இதை படிக்கலாம். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம்

 ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ் பெங்களூரு 18.06.2026 ஹரிதாஸ ஸாஹித்யத்தில் அங்கித உபதேசம் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால், இன்றோடு நமது குரு எனக்கு...