Thursday, January 5, 2023

2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு

2022-23 Updates

இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை. 

நாஹம் கர்தா ஹரி: கர்தா.

2022ம் ஆண்டில் நடந்தவை:

* 2022 உத்தராயணத்தில் பல புத்தகங்கள் வெளியாயின. வெளியிட்ட புத்தகங்கள் மொத்தம் 46ஆக இருந்தபோது, தொடர்ந்து அனைத்து புத்தகங்களையும் பெற்று வந்த ஹரிபக்தர்களும்கூட, வெவ்வேறு காரணங்களால் புத்தகங்களை வாங்குவதை நிறுத்திவிட, நாமும் சிறிது இடைவெளி விடலாம் என்று புதிய புத்தகங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டோம். 

* ஏற்கனவே அச்சிட்ட புத்தகங்களை வைப்பதற்கே இடம் இல்லாததாலும், புதிய புத்தகங்களுக்கு சிறிது இடைவெளி விடுவோம் என்ற முடிவு சரியாகவே இருந்தது. 

* ஆனாலும், தினம்தோறும் மொழி பெயர்ப்பு / உரை எழுதும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன / இருக்கின்றன. 

2023ம் ஆண்டில் திட்டமிட்டிருக்கும் வேலைகள்:

* நமது blogல் http://dasa-sahitya.blogspot.com தொடர்ந்து தினம் ஒரு பதிவு. தற்போது வந்துகொண்டிருக்கும் பிரஸன்ன விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யமே இன்னும் 6 மாதங்களுக்கு மேல் வரும். 

* நமது youtube channel - Jagannatha Kesava - இதில் கன்னட ஹரிதாஸ ஸாகித்யத்தின் தீர்க்க கிருதிகளின்  உரைத்தொடர்களும் (தமிழில் அர்த்த விளக்கங்கள்) தொடர்ந்து வரும். அடுத்து வரவிருப்பவை: ஸ்ரீகனகதாஸரின் ராமதான்ய சரிதெ, ஸ்ரீகுரு ஜகன்னாத தாஸரின் வெங்கடேஸ ஸ்தவராஜ, லட்சுமி ஸ்தவராஜ ஆகியவை. 

* மறுபடி இந்த 2023 உத்தராயணத்தில், புத்தகங்களை வெளியிடலாம் என்று சங்கல்பம் ஆகியிருக்கிறது. பல புத்தகங்கள் அச்சிடத் தயாராகவும் உள்ளன. கன்னட ஸ்ரீராகவேந்திர விஜயம் (அர்த்த விளக்கங்களுடன்), ஸ்ரீவ்யாஸ யோகி சரித்ரம், ஹரிகதாம்ருதஸார பல ஸ்ருதிகள் - என அந்த விவரங்களை அவ்வப்போது சொல்கிறேன். 

வேண்டுகோள்

* ஹரிதாஸ ஸாகித்யத்தின் சிறப்புகளை / மகிமைகளை விளக்கும் கிருதிகள் / காவியங்கள் / கட்டுரைகள் என அனைத்தையும் தமிழில் கொண்டு வரும் இந்த முயற்சியில், அனைவரும் பங்கு பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

* புத்தகங்களை அனைவரிடமும் சென்று சேர்ப்பதற்காக, இவற்றை இலவசமாக அல்லது மிகமிகக் குறைந்த விலையில் வெளியிடலாம். அதற்கு sponsors தேவைப்படுகிறது. ஆகவே, ஒரு வேண்டுகோள் / Appeal தகவலை அடுத்த வாரம் வெளியிடுகிறேன். இவ்வாறு sponsor செய்ய முடியாதவர்கள், இந்த புத்தகங்கள் வந்தபின், அவற்றை வாங்கிப் படித்து, பாதுகாத்து வந்தாலும் அதுவும் ஹரிதாஸ ஸாகித்யத்திற்கான ஸேவைதான் என்று நம்புகிறேன். 

* இந்த கிருதிகளை நம் குருகளிடம் பாடம் படிப்பது, கன்னட புத்தகங்களை வாங்குவது, மொழிபெயர்ப்பது அல்லது பல்வேறு புத்தகங்களைப் பார்த்து புதிதாக உரை எழுதுவது, பின் அதனை டைப் செய்து, ப்ரூப் பார்த்து, அச்சிற்கு அனுப்பும் வரை அனைத்தும் ஹரிவாயு குருகளின் அருளால் நானே செய்துவிடுகிறேன். இதனை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு மட்டுமே, புத்தகங்களை அச்சிடுவதற்கு மட்டுமே பணம் தேவைப்படுகிறது. 

* கடந்த 4 ஆண்டுகளாக, சம்பளம் / பென்ஷன் என எந்தவொரு நிரந்தர வருமானமும் இன்றி, (புத்தகங்கள் / மாதப் பத்திரிக்கை ஆகியவையும்கூட எவ்வித லாப நோக்குடன் நடத்தப்படுவதில்லை. அச்சிடும் செலவைவிட குறைவான விலையிலேயே இவை கொடுக்கப்படுகின்றன), இவை அனைத்தையும் ஹரிவாயு குருகளின் ஸேவை என்று எண்ணியே அடியேன் செய்து வருவதால், இத்தகைய புத்தகங்களுக்காக இவ்வாறு ஹரிபக்தர்களிடம் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. புத்தகப் பட்டியல், தேவைப்படும் தொகை என விவரங்களை அடுத்த தகவலில் சொல்கிறேன். 

* இதுவரை இந்த ஸேவைக்கு ஆதரவு அளித்துவந்த மற்றும் இனி ஆதரவு அளிக்கப்போகும் அனைவருக்கும் நன்றிகள். 

நன்றி ஹரே ஸ்ரீனிவாஸா.

சத்ய நாராயணன்

8904458276


Wednesday, August 31, 2022

10 உபநிஷத் கன்னட பத்யங்களின் மொழிபெயர்ப்பு

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ் பெங்களூரு

இன்றைய ஸ்ரீவினாயக சதுர்த்தி நாளில் துவங்கிய புதிய புத்தக மொழிபெயர்ப்பு.

ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாஸரின் உபநிஷத் கன்னட பத்யங்களின் மொழிபெயர்ப்பு.

* ஸ்ரீமதாசார்யர் 10 உபநிஷத்களுக்கு பாஷ்யங்களை எழுதியிருக்கிறார் (சம்ஸ்கிருத ஸர்வமூல கிரந்தங்கள்).

* ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாஸர் (1894-1983) அந்த 10 உபநிஷத் பாஷ்யங்களையும், கன்னட பத்யங்களாக இயற்றிக் கொடுத்திருக்கிறார். 

* த்ரி-பதி & ஷட்-பதிகளில் இருக்கும் அந்த கன்னட பத்யங்கள், மிகவும் எளிமையாக புரியும்படியாக, அதே சமயம் உபநிஷத் மற்றும் அதற்கான ஆசார்யரின் பாஷ்யத்தின் அர்த்தத்தினை நமக்கு தெளிவாக விளக்குகின்றன. 

* இதனை எனக்கு பாடம் எடுத்த என் அங்கிதோபதேச குருகளின் ஆசியுடன், இதில் 2 பாஷ்யத்தினை மட்டும் தற்போது தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று சங்கல்பம் ஆகியிருக்கிறது. 

* இதன் வடிவம் இவ்வாறு: உபநிஷத் வாக்கியம்; அதற்கான ஆசார்யரின் பாஷ்ய வாக்கியம்; அதற்கான தாஸரின் கன்னட பத்யங்கள்; அந்த கன்னட பத்யங்களின் அர்த்தங்கள் - என இவை அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். 

* பெண்களும் படிக்கக்கூடிய கன்னட பத்யங்கள்; அனைவரும் அறியவேண்டிய உபநிஷத் ரகசியங்கள் என அனைத்தையும் கன்னடத்தில் நமக்கு இயற்றிக் கொடுத்திருக்கும் ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாஸரின் சேவை அளப்பரியது. 

* இதனை நம் blogல் (https://dasa-sahitya.blogspot.com); youtube channelல் (Jagannatha Kesava) வில் வெளியிட்டு, பின் புத்தகமாகவும் வரவேண்டும் என்று ஸ்ரீகுருகோவிந்த விட்டலனை வேண்டிக் கொள்கிறேன். 

நாஹம் கர்தா: ஹரி: கர்தா:

நன்றி. ஹரே ஸ்ரீனிவாஸா. 

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

8904458276

Saturday, March 19, 2022

புத்தகப் பட்டியல் - 19-03-2022

JAGANNATHA KESAVA PUBLICATIONS

380, 2A MAIN, 16TH CROSS, JP NAGAR 4TH PHASE

BENGALURU 560078

PH: 8904458276. haridasa.vijayam@gmail.com

jagannathakesava.blogspot.com

 

இதுவரை வெளியாகியுள்ள புத்தகங்கள்

As on 19-March-2022

** அனைத்தும் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை **

 

#

Book name

Description

விலை

1

தந்தெ முத்துமோகனதாசர்

20ம் நூற்றாண்டின் முக்கியமான ஹரிதாசர். அவரது வாழ்க்கை வரலாறு, பாடல்கள்.

ரூ.100

2

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்

கன்னடத்தில் : பெம்மத்தி வெங்கடேஷாச்சார். கேள்வி பதில் வடிவத்தில் உள்ள புத்தகம்

ரூ.150

3

5 பரிசுத்த தேவதைகள்

பர சுக்ல த்ரயர்கள். கன்னடத்தில் : பெம்மத்தி வெங்கடேஷாச்சார். கேள்வி பதில் வடிவத்தில் உள்ள புத்தகம்

ரூ.100

4

குருகோவிந்த விட்டல தாசர்

20ம் நூற்றாண்டின் முக்கிய ஹரிதாசரைப் பற்றிய புத்தகம். கன்னடத்தில்: திரு.ஜெயசிம்மா

ரூ.50

5

 நாராயண பஞ்சர

ஸ்ரீபிரசன்ன வெங்கட தாசரின் கிருதி. அர்த்தங்களுடன்

ரூ.50

6

கோலு ஹாடு

ஸ்ரீமோகன தாசர் கிருதி. 217 நுடிகள். அர்த்தங்களுடன்

ரூ.70

7

ஸ்வப்ன பத

ஸ்ரீவாதிராஜர் கிருதி. கன்னடத்தில்: தாவண்கெரெ பீமராவ். அர்த்தங்களுடன்

ரூ.70

8

ஹரிசர்வோத்தம ஸார

ஸ்ரீவாதிராஜர் கிருதி. கன்னடத்தில்: தாவண்கெரெ பீமராவ். அர்த்தங்களுடன்

ரூ.50

9

ஹரிகதாம்ருதசாரம் - ஒரு கையேடு

முக்கிய குறிப்புகளின் தொகுப்பு

ரூ.30

10

கிருஷ்ணன பால லீலெ

ஸ்ரீவாதிராஜர் கிருதி. கன்னடத்தில்: தாவண்கெரெ பீமராவ். அர்த்தங்களுடன்

ரூ.80

11

சமஸ்த நாம மணிகண ஷட்சரண பத்யமாலா

ஸ்ரீபிரசன்ன வெங்கட தாசர் இயற்றிய கன்னட விஷ்ணு சஹஸ்ர நாமம்

ரூ.75

 

12

பிடெனோ நின்னங்க்ரி ஸ்ரீனிவாஸா

ஸ்ரீபிரசன்ன வெங்கட தாசரின் கிருதிகளில் ஆத்யாத்ம சிந்தனை கன்னடத்தில்: திரு.அப்பண்ணாசார்யர்

ரூ.50

13

வைகுண்ட வர்ணனெ

ஸ்ரீவாதிராஜர் இயற்றியது. அர்த்த விளக்கங்களுடன்

ரூ.250

14

ஜகன்னாத தாசர் பற்றிய கட்டுரைகள்

ஸ்ரீஜகன்னாத தாசரைப் பற்றிய 25 கட்டுரைகள்

ரூ.200

15

ஸ்ரீவிஜயதாசரின் 25 சுளாதிகள்

தமிழில் அர்த்த விளக்கங்களுடன்

ரூ.200

16

ஸ்ரீவிஜயதாசரின் வாழ்க்கை வரலாறு

திரு.வியாஸனகெரெ பிரபஞ்சனாசார்யரின் புத்தகத்தை மொழிபெயர்த்தது

ரூ.60

17

குண்ட க்ரியெ

ஸ்ரீவாதிராஜர் இயற்றியது. அர்த்த விளக்கங்களுடன்

ரூ.80

18

கன்னட தந்த்ர ஸார ஸங்க்ரஹம்

ஸ்ரீவரதேந்திர தீர்த்தர் இயற்றியது. அர்த்த விளக்கங்களுடன்

ரூ.50

19

ஸ்ரீரகூத்தம தீர்த்தர்

வாழ்க்கை வரலாறு, மகிமைகள், ஸ்தோத்திரங்கள் மற்றும் பாடல்கள்

ரூ.100

20

ஹரிதாச சாகித்யத்தில் ஸ்ரீதுளஸி

புராண, இதிகாசங்களில் மற்றும் ஹரிதாச சாகித்யத்தில் ஸ்ரீதுளஸியின் மகிமை

ரூ.120

21

கீசக வதெ

ஸ்ரீவாதிராஜர் இயற்றியது - அர்த்த விளக்கங்களுடன்

ரூ.50

22

ஸ்ரீபுரந்தரோபனிஷத்

கன்னடத்தில்: திரு.பன்னஞ்செ கோவிந்தாசார்ய

ரூ.150

23

ஸ்ரீவேதவ்யாஸ ஸ்தோத்திர மஞ்சரி

பல யதிகள் இயற்றிய ஸ்ரீவேதவ்யாஸ ஸ்தோத்திரங்களின் தொகுப்பு

ரூ.80

24

ஸுந்தர காண்டம்

ஸ்ரீவாதிராஜர் இயற்றியது. அர்த்த விளக்கங்களுடன்

ரூ.30

25

ஸ்ரீஹரிவாயுஸ்துதி மற்றும் ஸ்ரீமத்வர் பற்றிய ஸ்லோகங்கள்

மூலம் மட்டுமே - அர்த்தங்கள் இல்லை

ரூ.35

26

ஸ்ரீவிஷ்வோத்தம தீர்த்தர்

1943-2006 வரையிலான ஸோதே மடாதிபதி. வாழ்க்கை வரலாறு, மகிமைகளை விளக்கும் புத்தகம்

ரூ.100

27

வெங்கடேஷ பாரிஜாத

ஸ்ரீஅனந்தாத்ரீஷர் இயற்றியது. வெங்கடேச கல்யாணம். 10 அத்தியாயங்களில். மூலம் மட்டும்.

ரூ.120

28

ஹரிதாஸ ஹ்ருதய - பாகம் 1

சைத்ர, வைஷாக மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு என 60 ஹரிதாஸ சிந்தனைகள்

ரூ.80

 

கீழ்க்கண்ட வெளியான புத்தகங்கள் தற்போது ஸ்டாக் இல்லை

(இவற்றில் பல PDFஆக உள்ளது).

 

#

Book name

Description

1

ஸ்ரீசத்யபோத தீர்த்தர்

உத்தராதி மடத்து யதிகளைப் பற்றிய புத்தகம். கன்னடத்தில்: மலகி ஜயதீர்த்தாச்சார்.

2

ஸ்ரீசத்யத்யான தீர்த்தர்

உத்தராதி மடத்து யதிகளைப் பற்றிய புத்தகம். கன்னடத்தில்: மலகி ஜயதீர்த்தாச்சார்.

3

ஸ்ரீசத்யவீர தீர்த்தர்

உத்தராதி மடத்து யதிகளைப் பற்றிய புத்தகம். கன்னடத்தில்: மலகி ஜயதீர்த்தாச்சார்.

4

இந்தா குருகள காணெனோ

ஸ்ரீசத்யபிரமோத தீர்த்தரின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் 51 நுடி கொண்ட பாடல். இயற்றியவர்: சிக்கேரூரு முக்குந்தி ஸ்ரீகாந்தாச்சார்.

5

அக்ஷர மாலிகா ஸ்தோத்திரம்

ஸ்ரீராகவேந்திரர் + ஸ்ரீவாதிராஜரைப் பற்றியது.

6

ஸ்ரீவித்யா பிரசன்ன தீர்த்தர்

இவருடைய நாடகங்கள் + கட்டுரைகள்.

7

கேசவ நாமா பாடல்கள்

50 கேசவ நாமா பாடல்கள் அர்த்தங்களுடன். கன்னடத்தில்: திருமதி. ஜெயம்மா

8

ஸ்ரீநரஹரி தாசர்

18ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹரிதாசர். மைசூர் மகாராஜாவிடம் பரிசுகளை வாங்கியவர். அவரது 2 பெரிய + சில சிறிய கிருதிகளின் தொகுப்பு

9

தத்வ சுவ்வாலி

மூலம் + அர்த்தங்கள் என இரு புத்தகங்கள். ஸ்ரீஜகன்னாத தாசர் இயற்றியது. கன்னடத்தில்: தாவண்கெரெ பீமராவ்

10

மத்வ நாமா

கன்னடத்தில்: சிக்கேரூரு முக்குந்தி ஸ்ரீகாந்தாச்சார்.

11

வரத வெங்கட விட்டல தாசர்

காஞ்சிபுரத்தில் வாழும் ஹரிதாசர். தாசர் இயற்றிய தேவரநாமாக்களின் தொகுப்பு

12

மத்வ விஜய பிரமேய பல மாலிகா

மாதனூர் ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர் இயற்றியது. அர்த்தத்துடன்.

13

மத்வகதாம்ருதம்

மத்வ விஜயத்தின் சாரம். உரைநடை வடிவில். கன்னடத்தில்: திரு..பி. ஷ்யாமாச்சார்

  

இத்தகைய மற்றும் வேறு சில அரிய கன்னட ஹரிதாச சாகித்ய புத்தகங்கள் தமிழில் வருவதற்கு பொருளுதவி செய்யும் Sponsors தேவை. தமிழ் மாத்வர்களுக்கு இத்தகைய புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு, இந்த ஞான காரியத்திற்கு உதவவும்.

|| ஹரே ஸ்ரீனிவாஸா ||

 

ஹரிதாச விஜயம் தமிழ் மாத இதழ்

சந்தா விவரம் (36 பக்கங்கள்)

1 ஆண்டுக்கு ரூ.200/-    3 ஆண்டுகளுக்கு ரூ.500/-

5 ஆண்டுகளுக்கு ரூ.900/-      10 ஆண்டுகளுக்கு ரூ.1700/-

வங்கி விபரம்:

Sathya Narayanan, ICICI Bank - Savings account, A/c. No. 000101043177.

IFSC: ICIC0000001, Cenotaph Road Branch, Chennai 18

 

மாதத்திற்கு ஒரு இலவச PDF புத்தகம்

இதுவரை நாம் வெளியிட்ட அனைத்து இலவச PDF புத்தகங்களை download செய்து படிப்பதற்கு, இந்த தளத்திற்கு செல்லவும்.

https://archive.org/details/@sathya_narayanan

 

பாவபிரகாசிகை - PDF

ஸ்ரீபத்மனாபதாசர் இயற்றிய பாவபிரகாசிகையின் (ஹரிகதாம்ருதசாரத்தின் கன்னட உரை) தமிழ் மொழிபெயர்ப்பின் PDF இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும். https://tinyurl.com/j2m4thn4

 

2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...