Sunday, January 12, 2020

ஹரிகதாம்ருதசாரம் - தமிழில்



சுமார் 1920ம் ஆண்டில், ஸ்ரீபத்பனாப தாசர் என்பவர், ஹரிகதாம்ருதசாரத்திற்கு ‘பாவபிரகாசிகை’ என்ற தலைப்பில், கன்னடத்தில் ஒரு உரை (வ்யாக்யானம்)  எழுதினார். ஸ்ரீபரமப்ரிய சுப்பராய தாசரின் வேண்டுகோளின்படி எழுதப்பட்ட இந்த உரைக்கு, அன்றைய காலத்தில் ஸ்ரீசத்யத்யான தீர்த்தர் ஆசி வழங்கியுள்ளார். பின் வந்த அனேக பண்டிதர்கள் இதை ஒரு அற்புத உரை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்த உரையின் மொழிபெயர்ப்பை https://hks-bhavaprakashike.blogspot.in என்னும் இணையதளத்தில், குருகளின் அருளால் தினம் ஒரு ஸ்லோகமாக வெளியிட உள்ளோம். முன்னுரைகள், சந்தியின் நோக்கம், ஸ்லோகங்கள் என தொடர்ந்து 1000+ நாட்களுக்கு பதிவுகள் இடவேண்டும் என்பது திட்டம். துவக்கத் தேதி : ஸ்ரீகோபாலதாசரின் புண்ய தினமான 18-ஜனவரி-20.

ஹரிகதாம்ருதசாரம் படிக்கும் / அதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் இதை தெரியப்படுத்தவும். தினந்தோறும் மேற்சொன்ன இணையதளத்திற்குச் சென்று அன்றைய ஸ்லோகத்தையும், அதற்கான தாசரின் விளக்கங்களையும் படிக்கவும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து


***

2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...