Thursday, December 30, 2021

2021க்கான நன்றி கூறுதல் : புத்தகங்களை வாங்கியவர்களுக்கு.

2021க்கான நன்றி கூறுதல் : புத்தகங்களை வாங்கியவர்களுக்கு.

புத்தகங்களை பதிப்பித்தால் மட்டும் போதுமா, அதை ஆர்வத்துடன் வாங்கி படிப்பவர்கள் இருந்தால்தானே, அடுத்தடுத்த புத்தகங்கள் வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆகவே, அப்படி நம் புத்தகங்களை வாங்கிப் படித்தவர்களுக்கு இந்த 2021 ஆண்டின் இறுதியில் சிறப்பு நன்றிகள். அப்படி வாங்கிய புத்தகங்களைப் பற்றிய கமெண்ட்ஸும் பலர் அழைத்துச் சொல்வதுண்டு. அவற்றில் சில:

* தத்வ சுவ்வாலி புத்தகம் ஒரு பொக்கிஷம். 

* ஜகன்னாததாசர் கட்டுரைகள் - is a gem of a book.

* ஸ்ரீவாதிராஜரின் கிரந்தங்கள் அனைத்தும் அருமை. எல்லாவற்றையும் hard-bind செய்து என் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கே கொடுக்கணும். 

* உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் கிடைக்கும்போது வாங்கிவிடுகிறேன். மெதுவாக நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக படிப்பேன். 

* உங்கள் புத்தகங்களுக்காக ஒரு தனி அலமாரியையே ஒதுக்கி விட்டேன். எந்தப் புத்தகம் வந்தாலும் எனக்கு கண்டிப்பாக ஒரு செட் அனுப்பி விடவும். 

* என் மேஜை முழுக்க உங்கள் புத்தகங்களே. ஒன்று மாற்றி ஒன்று படிக்கிறேன். 

இவை தவிர, புத்தகங்களைப் படித்து அதில் சந்தேகங்களைக் கேட்பவர்களும் சிலர் உண்டு.

* வைகுண்ட வர்ணனெ கிரந்தத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கவனமாக படித்து, அவ்வப்போது தொலைபேசி அதில் சந்தேகங்களைக் கேட்கும் ஹரிபக்தர் ஒருவர்.

* ஷட்சரண பத்யமாலா ஒரு பத்யத்தில் உள்ள வரிகள் மிக அழகு என்று சொல்லி, அதன் விளக்கத்தைக் கேட்கும் பக்தர் ஒருவர்.

என பல அழைப்புகள். 

ஹரிவாயுகுருகளின் புத்தகங்களைப் பற்றி படிப்பது, எழுதுவது, பேசுவது என அனைத்தும் மகிழ்ச்சியையே கொடுப்பவை. இவ்வாறு இதுவரை புத்தகங்களை வாங்கிய, இனி வாங்கப் போகும் அனைவருக்கும் மிக்க நன்றிகள். 

ஹரிவாயுகுருகளின் ஹரிதாசர்களின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று சொல்லி, அடுத்த மாத வெளியீடுகளின் விவரங்கள் விரைவில் வரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். 

நன்றி. ஹரே ஸ்ரீனிவாஸா.

சத்ய நாராயணன்

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு

8904458276

***



Saturday, December 25, 2021

2021க்கான நன்றி கூறுதல் : ஸ்பான்ஸர்களுக்கு சிறப்பு நன்றிகள்

2021க்கான நன்றி கூறுதல் : ஸ்பான்ஸர்களுக்கு சிறப்பு நன்றிகள்

1. தத்வ சுவ்வாலி
2. ஜகன்னாத தாசர் கட்டுரைகள்
3. வைகுண்ட வர்ணனெ
4. ஸ்ரீவிஜயதாசரின் 25 சுளாதிகள்
5. குண்டக்ரியெ + 2 புத்தகங்கள்

2021 ஆகஸ்டிலிருந்து டிசம்பர் வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 400 பக்கங்களுக்குக் குறையாத புதிய தமிழ்ப் புத்தகங்கள் ஸ்ரீஹரிவாயு குருகளின், ஹரிதாசர்களின் அருளால் வந்திருக்கின்றன. 

நமக்கு பொருளுதவி செய்து, இந்த புத்தகங்களை குறைந்த விலையில் வெளியிட உதவி செய்த ஹரிபக்தர்கள் - ஸ்பான்சர்ஸ் - நண்பர்களுக்கு, மிகவும் முக்கியமாக நன்றிகளை கூற கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுடைய உதவி இல்லையெனில், தமிழில் இத்தகைய அரிய புத்தகங்கள் வந்திருக்காது.

அருமையான சாகித்ய சேவை செய்திருக்கும் அவர்களுக்கு ஹரிவாயு குருகளின் ஹரிதாசர்களின் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 

மேலும் சிலர் தொடர்ந்து பொருளுதவி செய்வதால் / செய்வதாக சொல்லியிருப்பதால், இன்னும் பல புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும், மொழிபெயர்க்க வேண்டும் என்றும் உற்சாகம் வந்திருக்கிறது. 2022ம் ஆண்டும் இதே போல புத்தக வெளியீடுகள் இருக்க வேண்டும் என்று (பாரதிரமண முக்யபிராணாந்தர்கத) பிம்பமூர்த்தியை வணங்கிக் கொள்கிறேன். 

ஹரிகதாம்ருதசார உரையான பாவபிரகாசிகை குறைந்த பட்சம் 1000 A4 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதனை இதுவரை புத்தகமாக வெளியிட முடியாமல் இருக்கிறது. ஸ்ரீஹரியின் அருளால் அதுவும் இந்த 2022ம் ஆண்டில் முடிகிறதா என்று பார்ப்போம். 

நாஹம் கர்தா ஹரி: கர்தா
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
சத்ய நாராயணன்
ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ்
8904458276

Friday, November 19, 2021

ஸ்ரீவிஜயதாசரின் இரு புத்தகங்கள்

ஜகன்னாதகேசவ பப்ளிகேஷன்ஸ்

பெங்களூரு

ஸ்ரீவிஜயதாசரின் இரு புத்தகங்கள்



* ஸ்ரீவிஜயதாசரின் புத்தக பார்சல்கள் அனைத்தும், நவம்பர் 17, 18, 20, 22 ஆகிய தேதிகளில் தபால் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன / சேர்க்கப்படவிருக்கின்றன. 

* சென்ற மாத புத்தகங்கள் சிலருக்கு மிகவும் (12-15 நாட்கள் வரை) தாமதமாக சென்று சேர்ந்திருக்கின்ற்ன. 

* பல இடங்களில் இன்னும் மழை தொடர்வதால், இந்த புத்தகங்களும் தாமதமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 

* Normal postல் போட்டப்பட்டதை என்னால் track செய்ய முடியாது. புத்தக பார்சல்களுக்கு உங்கள் தபால்காரரையே நீங்கள் கேட்க வேண்டும். 

* உங்கள் ஆதரவிற்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி.

சத்ய நாராயணன்

8904458276

***



Wednesday, September 1, 2021

ஸ்ரீஜகன்னாத தாசரைப் பற்றிய 25 கட்டுரைகள்

ஸ்ரீஜகன்னாத தாசரைப் பற்றிய 25 கட்டுரைகள். மொத்தம் 400 பக்கங்கள்

1. ஜகன்னாததாசரின் வாழ்க்கைச் சரிதம் - வித்யாவாசஸ்பதி, டாக்டர். திரு. அருளுமல்லிகெ பார்த்தசாரதி

 2. ஹரிதாச சாகித்யத்தில் ஸ்ரீஜகன்னாத தாசரின் பங்கு - டாக்டர் திரு. N.K.ராமசேஷன்

 3. ஹரிகதாம்ருதசாரத்தில் பக்தியின் பார்வை - திருமதி. ஜயலட்சுமி மங்களாமூர்த்தி

 4. ஜகன்னாத தாசரின் சுளாதிகள் - டாக்டர். ஷீலாதாஸ், ராய்ச்சூர்

 5. ஹரிகதாம்ருதசாரத்தில் ஞான பக்தி வைராக்கியம் - திருமதி. சுதா நரசிங்கராவ் தேஷ்பாண்டே

 6. ஹரிகதாம்ருதசாரத்தில் உவமான உவமேயங்கள் - டாக்டர். ஸ்வாமிராவ் குல்கர்ணி

 7. காவிய நடைக்கு சாஸ்திர நடையின் மேற்பூச்சு - Prof. A.V. நாவட

 8. ஹரிகதாம்ருதசாரத்தில் நீதிநெறி - திருமதி. ரேகா காகண்டகி

 9. ஹரிகதாம்ருதசாரத்தில் மொழியின் சிறப்பு - திருமதி. சாந்தா ரகோத்தமாச்சார்

 10. ஹரிகதாம்ருதசாரத்தில் நரசிம்மரை வணங்குதல் - திரு. ஹணவந்த தாஸகாம்வகர

 11. ஹரிகதாம்ருதசாரத்தில் சங்கீதத்தின் அம்சங்கள் -திருமதி. K. வாருணி ஜயதீர்த்தாச்சார்

 12. 10 ஹரிகதாம்ருதசாரத்தில் தேவதா-வர்ணனை - டாக்டர் சகுந்தலா ஷெட்டி, ராய்ச்சூர்

 13. ஸ்ரீஜகன்னாததாசரின் ஹரிகதாம்ருதசாரம் மற்றும் தத்வசுவ்வாலி - டாக்டர் R.G.குடி

 14. ஹரிகதாம்ருதசாரம் - டாக்டர் மதுசூதன் ஜோஷி

 15. ஸ்ரீஜகன்னாததாசரின் கிருதிகளின் சிறப்பு - டாக்டர் லக்‌ஷ்மிகாந்த V. மோஹரீர

 16. சுற்றுச்சூழல் பாதுகாப்பு - திரு. ஸ்ரீனிவாச சிரனூர்கர்

 17. ஸ்ரீஜகன்னாததாசரின் பாடல்களில் நாட்டுப்புற பண்களின் அம்சங்கள் - திருமதி. சி.எஸ். அருணா காந்தனவர

 18. மானவியின் மகான் ஸ்ரீஜகன்னாததாசர் - திரு. விஜயராவ் குபனேஷி, மானவி

 19. பலவிது பாள்துதக்கெ - திரு. பரசுராம் பெடகேரி

 20. ஹரிகதாம்ருதசாரம் - திரு. லட்சுமிபதிராஜா

 21. மானவி பகுதி ஹரிதாசர்கள் - திருமதி. வித்யா கஸபே

 22. பித்ரு கண சந்தி - வித்வான் பெம்மத்தி வெங்கடேஷாச்சார்

 23. ஸ்தம்பமந்திரவாசி ஸ்ரீஜகன்னாததாசரு - திருமதி. வித்யாஸ்ரீ கட்டி

 24. அக உலகம் - திரு. ஸ்ரீநிதி ஆசார்ய ப்யாடி

 25. ஹரிகதாம்ருதசாரத்தில் முக்யபிராணரின் சிந்தனைதிரு. சக்ரி ராகவேந்திர உபாத்யாய

***

Wednesday, January 20, 2021

ஹரிதாச விஜயம் - ஜனவரி 2021 அப்டேட்ஸ்

ஹரிதாச விஜயம் - ஜனவரி 2021 அப்டேட்ஸ்

1. பிப்ரவரி 2021 இதழ் இன்று தபாலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இதனை படிப்பதற்கு, இங்கு சென்று ‘haridasa’ என்று தேடி படிக்கலாம். 

www.readwhere.com

2. ஜனவரி 2021 மாதத்தின் இலவச ஈ-புக்:

ஹரிதாச விஜயம் 2019ல் வந்த மூன்று இதழ்கள், ஒரே PDFல்.

https://archive.org/details/haridasa-vijayam-2019-issues/mode/2up

3. இதுவரை வந்த அனைத்து இலவச ஈ-புத்தகங்களையும் இங்கு பார்த்து, டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

https://archive.org/details/@sathya_narayanan

4. 30 புத்தகங்களைக் கொண்ட விரத புத்தக செட். அனைத்து விரதங்களின் பூஜா விதானம், ஸ்தோத்திரங்கள், கன்னட கிருதிகள், சமையல்கள் இவற்றுடன் அந்த விரத்தைப் பற்றிய - ஏன், எதற்கு, எப்படி, எப்போது - போன்ற பல அபூர்வ தகவல்கள், தக்க ஆதாரங்களுடன் நிறைந்த புத்தகங்கள். 3500+ பக்கங்களைக் கொண்டது. தற்போது முன்பதிவு செய்ய: ரூ2000+250. புத்தக வெளியீடு: மத்வநவமியன்று. 21.2.2021. முன்பதிவு செய்ய: www.jagadgurusrimadhvacharya.com சென்று அங்கு பணம் செலுத்தவும். 

5. மந்திராலயத்தில் அடியேனின் புதிய புத்தகங்கள். விவரங்களுக்கு:

http://jagannathakesava.blogspot.com/2021/01/blog-post.html

6. நீங்கள் Facebookல் இருந்தால் ‘ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ்’ பக்கத்தை ‘லைக்’ செய்து, அதில் வரும் தகவல்களை பார்த்துக் கொள்ளவும். தகவல்கள் பிடித்திருந்தால், மற்றவர்களுக்கு ‘share' செய்தும் உதவலாம். 

https://www.facebook.com/Jagannatha-Kesava-Publications-107350883990624


ஹரே ஸ்ரீனிவாசா.

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

8904458276. haridasa.vijayam@gmail.com

jagannathakesava.blogspot.com




Wednesday, January 13, 2021

மந்திராலயத்தில் அடியேனின் புத்தகங்கள்


 மந்திராலயத்தில் அடியேனின் புத்தகங்கள்





* ஸ்ரீகுருராகவேந்திர ஸ்வாமிகளின் அருளால் அடியேன் மொழிபெயர்த்த சில புத்தகங்கள் தற்போது மந்திராலயத்தில் (மட்டுமே) கிடைக்கின்றன.

* பிருந்தாவனம் அருகில் உள்ள புத்தகக் கடையில் மட்டும் இவை கிடைக்கின்றன. (என்னிடம் இவை இல்லை).

* ஒவ்வொரு புத்தகமும் (சிறிய அளவிலான) 50 பக்கங்கள். விலை தலா ரூ10/- மட்டுமே.

* தமிழில் நான் மொழிபெயர்த்தது. தவிர, இவை ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கின்றன.

* மந்திராலயம் செல்பவர்கள் கண்டிப்பாக அந்த புத்தகக் கடைக்குச் சென்று இவற்றை வாங்கிக் கொள்ளலாம். 

* இதுவரை 25 புத்தகங்கள் வந்துள்ளன. இனி மாதம்தோறும் 10 புதிய புத்தகங்கள் வரலாம். மொத்தம் 1000 புத்தகங்கள் என திட்டம். அடுத்து, ராயரின் அருள் இருந்தால் இவை நடக்கும். 

ஹரே ஸ்ரீனிவாஸா! குரோ ராகவேந்திரா!

’ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

89044 58276. haridasa.vijayam@gmail.com

jagannathakesava.blogspot.com


2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...