Monday, October 15, 2018

Introduction - அறிமுகம்

பதிப்பக அறிமுகம்

மாத்வ சம்பிரதாயத்தில் கன்னடத்தில் பல்வேறு அரிய புத்தகங்கள் உள்ளன. அனைவரும் படிக்கும்படியான இந்தப் புத்தகங்களை, தமிழ் மட்டுமே அறிந்த மாத்வர்கள் படிக்க முடியாததால், பல அரிய தகவல்களை அறியமுடியாமல் போகின்றது. இந்த பிரச்னையை போக்குவதற்கு, அனைவரும் படிக்க ஏதுவான பயனுள்ள புத்தகங்களை மொழிபெயர்த்து தமிழில் வெளியிடத் தொடங்கியுள்ளோம். 

கன்னடத்தில் எழுதுபவர்கள் பலரை தொடர்பு கொண்டு, அவர்களின் மதிப்புமிக்க புத்தகங்களை தமிழில் கொண்டு வருவதற்காக அனுமதி வாங்கி, அவற்றை மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் உள்ளோம்.

இதுவரை வெளியான புத்தகங்கள் மற்றும் அமேசான் கிண்டிலில் படிக்கும்படியான ஈ-புத்தகங்களின் பட்டியல் / தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன. 

தமிழ்ப் புத்தகங்கள், சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் பல மடங்கள், கடைகளில் கிடைக்கின்றன. மேலும் தகவல்கள் வேண்டுவோர் எம்மை தொடர்பு கொள்ளவும். 

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பெங்களூரு
கைப்பேசி: 89044 58276


Friday, September 28, 2018

மத்வகதாம்ருதம்



இது E-புத்தகம் மட்டுமே வெளிவந்துள்ளது. 
காகித-புத்தகம் இன்னும் வெளிவரவில்லை


தலைப்பு: மத்வகதாம்ருதம்
கன்னட மூலத்தை எழுதியவர்: திரு.A.B.ஷ்யாமாச்சார்
தமிழில் மொழிபெயர்த்தவர்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 120

விவரம்:

* மத்வவிஜயத்தின் 16 சர்க்கங்களின் சுருக்கம்
* பிற்சேர்க்கைகள்:
பிற்சேர்க்கை 1: சர்வமூல கிரந்தங்கள்
பிற்சேர்க்கை 2: பொன்மொழிகள்
பிற்சேர்க்கை 3: உடுப்பி கிருஷ்ணன்
பிற்சேர்க்கை 4: உடுப்பி க்‌ஷேத்திரங்கள்
பிற்சேர்க்கை 5: விக்கிரகங்கள் மற்றும் மடங்கள்
பிற்சேர்க்கை 6: ஸ்ரீமதானந்ததீர்த்தரின் மகிமைகள்


Amazon Kindleல் வாசிக்க:







ஜாம்பவதிப்ரியவிட்டலதாசர் கட்டுரைகள்




இது E-புத்தகம் மட்டுமே வெளிவந்துள்ளது. 
காகித-புத்தகம் இன்னும் வெளிவரவில்லை.

தலைப்பு : ஜாம்பவதிப்ரியவிட்டலதாசர் கட்டுரைகள்
கன்னட மூலத்தை எழுதியவர்: ஹரதி பிரகலாதாச்சார் (ஜாம்பவதிப்ரியவிட்டலதாசர்)
தமிழில் மொழிபெயர்த்தவர்: ‘ஜகன்னாதகேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 150

விவரம்:

* இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளின் பட்டியல்:
- தாச சதுஷ்டயர்
- யக்‌ஷ கானம்
* மாத்வ சம்பிரதாயத்தில் அசம்பிரதாயங்கள்
* வாக்யேயகாரர்கள்
* நைவேத்தியம்
* ஹரிதாச சாகித்யத்தில் தத்வம் மற்றும் சித்தாந்தம்
* எவ்வளவு நற்பலன்? கெட்டபலன் என்றால் என்ன?
* அபரோக்‌ஷ அனுபவம்
* ஹரிதாச சாகித்யத்தில் என்ன இருக்கிறது?
* ஸ்ரீமன் மத்வாசார்யர்

Amazon Kindleல் வாசிக்க:




குருகோவிந்தவிட்டலதாசர்



இது E-புத்தகம் மட்டுமே வெளிவந்துள்ளது. 
காகித-புத்தகம் இன்னும் வெளிவரவில்லை.

தலைப்பு: குருகோவிந்தவிட்டலதாசர்
கன்னட கட்டுரைகளை எழுதியவர்: திரு.ஹரதி பிரகலாதாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாரயணன்
பக்கங்கள்: 150

விவரம்:

* 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய ஹரிதாசர் - குருகோவிந்தவிட்டலதாசர். இவரது இயற்பெயர் - திருM.R.கோவிந்த ராவ், மைசூர்.
* இவர் தந்தெமுத்துமோகனதாசர் - (பரமப்ரிய சுப்பராயதாசரிடம்) அங்கிதம் வாங்கினார்.
* 250க்கும் மேற்பட்ட ஹரிதாசர்களுக்கு அங்கிதம் கொடுத்துள்ளார்.
* பற்பல கிரந்தங்கள், பாடல்களை எழுதியவர்.
* இவரிடம் அங்கிதம் வாங்கிய பலர் இன்றும் கர்னாடகத்தில், ஹரிதாச சாகித்யத்தை பல்வேறு விதங்களில் வளர்த்து வருவதை பார்க்கலாம்.
* கட்டுரைகளை எழுதிய ஹரதி பிரகலாதாச்சார் (அங்கிதம்: ஜாம்பவதிப்ரியவிட்டலதாசர்), குருகோவிந்தவிட்டலதாசரிடம் அங்கிதம் வாங்கியவர்.
* இந்த புத்தகத்தில் 150 பக்கங்களில் 6 கட்டுரைகள் உள்ளன. (குருகோவிந்தவிட்டலதாசரின் வாழ்க்கை வரலாறும் இதில் ஒன்று).

Amazon Kindleல் வாசிக்க:

https://www.amazon.in/dp/B07HQVGZB3





Thursday, September 27, 2018

ஹரிதாஸ ஹ்ருதய


இது E-புத்தகம் மட்டுமே வெளிவந்துள்ளது. 
காகித-புத்தகம் இன்னும் வெளிவரவில்லை. 

தலைப்பு: ஹரிதாஸ ஹ்ருதய
கன்னட மூலத்தை எழுதியவர்: திரு.ஏ.பி.ஷ்யாமாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 450

விவரம்:

* ஒரு நாளுக்கு ஒன்று என ஆண்டின் 360 நாட்களுக்கு 360 சிந்தனை முத்துக்கள்.
* ஹரிதாசர்களின் வாக்கினில் மத்வ சித்தாந்த கூற்றுகள்.
* மத்வ சித்தாந்தத்தின் தத்துவங்களான ஹரி சர்வோத்தம, வாயு ஜீவோத்தம, பஞ்ச-பேத, தாரதம்ய என அனைத்து தத்வங்களைப் பற்றி ஹரிதாசர்கள் சொல்வது என்ன?
* முக்கிய யதிகள், ஹரிதாசர்களின் ஆராதனை, புண்ணிய தினங்களில் அவர்களைப் பற்றி அவர்களின் சிஷ்யர்கள் / பரம்பரையினர் பாடியது எவ்வாறு?
* பல அபூர்வமான சுளாதி, உகாபோகங்களின் அறிமுகம் இந்தப் புத்தகத்தில் கிடைக்கிறது.
* தினமும் ஒரு பக்கம் படிப்போம். அதன்படி நடப்போம்.

Amazon Kindleல் வாசிக்க:


ஸ்ரீசத்யத்யான தீர்த்தர்



தலைப்பு: ஸ்ரீசத்யத்யான தீர்த்தர்
கன்னட மூலத்தை எழுதியவர்: மலகி ஜயதீர்த்தாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 216
விலை: ரூ.110

விவரம்:

* ஸ்ரீமத் உத்தராதி மடத்து பீடத்தை ஆண்டு 1911 முதல் 1942 வரை அலங்கரித்த மகான்.
* இவரது மூல பிருந்தாவனம் இருக்கும் இடம் - பண்டரிபுரம்.
* இந்தப் புத்தகத்தில் இவரது வாழ்க்கை வரலாறு, மகிமைகள், இவரைக் குறித்த பாடல்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவை உள்ளன.

Amazon Kindleல் வாசிக்க: 


https://www.amazon.in/dp/B07HD1SRDM



ஸ்ரீசத்யவீர தீர்த்தர்



தலைப்பு: ஸ்ரீசத்யவீர தீர்த்தர்
கன்னட மூலத்தை எழுதியவர்: மலகி ஜயதீர்த்தாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 64
விலை: ரூ.40

விவரம்:

* ஸ்ரீமத் உத்தராதி மடத்து பீடத்தை ஆண்டு 1879 முதல் 1886 வரை அலங்கரித்த மகான்.
* இவரது மூல பிருந்தாவனம் இருக்கும் இடம் - கொர்லஹள்ளி
* இந்தப் புத்தகத்தில் இவரது வாழ்க்கை வரலாறு, மகிமைகள், இவரைக் குறித்த பாடல்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவை உள்ளன.

Amazon Kindleல் வாசிக்க: 


https://www.amazon.in/dp/B07HCZCLNV


ஸ்ரீசத்யபோத தீர்த்தர்




தலைப்பு: ஸ்ரீசத்யபோத தீர்த்தர்
கன்னட மூலத்தை எழுதியவர்: மலகி ஜயதீர்த்தாச்சார்
தமிழில் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 164
விலை: ரூ.70

விவரம்:

* ஸ்ரீமத் உத்தராதி மடத்து பீடத்தை 39 ஆண்டுகள் அலங்கரித்த மகான்.
* ஆண்டு 1744 முதல் 1783 வரை
* இவரது மூல பிருந்தாவனம் இருக்கும் இடம் - சாவனூர்.
* இந்தப் புத்தகத்தில் இவரது வாழ்க்கை வரலாறு, மகிமைகள், இவரைக் குறித்த பாடல்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவை உள்ளன.

Amazon Kindleல் வாசிக்க: 


https://www.amazon.in/dp/B07HD17MB2


தந்தெமுத்துமோகனதாசர்


தலைப்பு: தந்தெமுத்துமோகனதாசர் (பரமப்ரிய சுப்பராய தாசர்)
கன்னட மூலத்தை எழுதியவர்: திரு.அனந்தஸ்வாமி ராவ்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 270
விலை: ரூ.150

விவரம்:

* 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஹரிதாசர்கள் இவர்.
* தும்கூர், தேவராயனதுர்காவை சேர்ந்த இவர், தென் கர்னாடகாவில் ஹரிதாச சாகித்யம் நன்கு வளர்ந்து வந்ததற்கு காரணமாவார்.
* அவரது வம்சத்தினரால் வெளிபட்ட கன்னட புத்தகத்தின் மொழிபெயர்ப்பு
* 1165 பேருக்கு (பிராமணர் அல்லாதவர்க்கும்) அங்கிதம் வழங்கி, பற்பல கிரந்தங்கள் / பாடல்களை இயற்றிய ஹரிதாசர் இவர்.
* அவரது வாழ்க்கை வரலாறு, அங்கிதப் பட்டியல், அரிய புகைப்படங்கள் என பல தகவல்களைக் கொண்ட புத்தகம்.

Amazon Kindleல் வாசிக்க:


https://www.amazon.in/dp/B07BQNC7PK


ஐந்து பரிசுத்த தேவதைகள்



தலைப்பு: ஐந்து பரிசுத்த தேவதைகள் (பர சுக்ல த்ரயர்கள்)
கன்னட மூலத்தை எழுதியவர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 290
விலை: ரூ.150

விவரம்:

* சர்வோத்தமனான ஸ்ரீவிஷ்ணுவிற்குப் பிறகு தாரதம்யத்தில் வரும் ‘பர சுக்ல த்ரயர்களை’  பற்றிய புத்தகம்.
* மகாலட்சுமி, பிரம்மா, வாயு, சரஸ்வதி & பாரதிதேவியரைப் பற்றிய தகவல்கள் கொண்டது.
* வாயுவின் அவதாரங்களான ஹனும, பீம, மத்வரைக் குறித்த தகவல்களும், சர்வமூல கிரந்தங்கள், ருஜுகணஸ்தர்கள், பாரதிதேவியின் அவதாரங்கள் என பல மேலதிக தகவல்களும் உள்ளன.
* கேள்வி பதில் வடிவில் அமைந்த புத்தகம், படிப்பதற்கும் எளிதானது.

Amazon Kindleல் வாசிக்க:

https://www.amazon.in/dp/B07BJJW5VQ




ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்


தலைப்பு: ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னட மூலத்தை எழுதியவர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
பக்கங்கள்: 352
விலை: ரூ.200

விவரம்:

* கேள்வி பதில் வடிவில் அமைந்த புத்தகம்.
* படிக்க மிகவும் எளிதானது
* ஸ்ரீமத்வர் தமது தந்த்ரசார சங்க்ரஹம் மற்றும் இதர சர்வமூல கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ள அவதாரங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.

Amazon Kindleல் வாசிக்க:

https://www.amazon.in/dp/B07B2ZS59G

***


2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...