Wednesday, September 2, 2020

செப்டம்பர்2020 - ஹரிதாசர்களைப் பற்றிய கேள்வி பதில் போட்டி

 * ஹரிதாசர்களைக் குறித்த மாதாந்திர கேள்வி பதில் போட்டி -2.

* சென்ற மாதத்தின் விடைகள் இங்கே உள்ளது. விடைகளை அனுப்பி புத்தகப் பரிசு பெற்றவர்கள் ஐந்து பேர்.

* கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதி செப்டம்பர் 25ம் தேதிக்குள் : 8904458276 எண்ணிற்கு வாட்சப் அல்லது haridasa.vijayam@gmail.com க்கு ஈமெயில், அனுப்பலாம். 

* செப்டம்பர்/அக்டோபர்2020 மாதங்களில் ஆராதனை / புண்ய தினம் கொண்டவர்களைப் பற்றியும் + சில பொதுவான கேள்விகளும் உள்ளன.

* சரியான விடைகள் அனுப்புபவர்களுக்கு புத்தகப் பரிசு உண்டு.

* இதை உங்கள் க்ரூப்களில் ஷேர் செய்து, அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். --- 

** FROM ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு.

***

1. இவர்களில் யார் கனவில் அங்கிதம் பெற்றார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C ஜகன்னாததாசர்

D கோபாலதாசர்

2. பாகேபல்லி சேஷதாசர் யாரிடமிருந்து அங்கிதம் வாங்கினார்?

A ஸ்ரீநிதி விட்டலர்

B ஸ்ரீவர விட்டலர்

C தந்தெமுத்துமோகன தாசர்

D முத்துமோகன தாசர்

3. 15/16ம் நூற்றாண்டில் ஹரிதாசர்களின் தலைமையிடம்?

A ஹம்பி

B மந்திராலயம்

C ராய்ச்சூர்

D திருப்பதி

4. த்வைத சித்தாந்தத்தைப் பற்றி அதிக தகவல்கள் தரும் கிரந்தம்?

A மணிமஞ்சரி

B தத்வபிரதீபா

C மத்வ விஜய

D பிரம்ம சூத்ர

5. ப்ராணேச தாசருக்கு சமகால யதிகள்?

A சத்யதர்ம தீர்

B சத்யபோத தீர்

C புவனேந்திர தீர்

D A&B

6. இவர்களில் யார் ஸ்ரீஹரியிடமிருந்து நேரடியாக அங்கிதம் பெற்றார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C ஜகன்னாததாசர்

D கோபாலதாசர்

7. ஹரிதாசர்கள் முக்தியடைய எந்த வழியை பின்பற்றினர்?

A கர்ம மார்க்கம்

B ஞான மார்க்கம்

C யோக மார்க்கம்

Dபக்தி மார்க்கம்

8. மத்வருக்கு முன் எவ்வளவு பாஷ்யகாரர்கள் இருந்தனர்?

A 12

B 24

C 21

D 18

9. ஜலஜேஷ்ட நிபாகாரம்.. _ குரும் பஜே

A புரந்தர

B விஜய

C ஜகன்னாத

D கோபால

10. இவற்றில் எது சப்த (7) தாளத்திற்கு உட்பட்டது?

A கீர்த்தனை

B உகாபோகம்

C சுளாதி

D மற்றவை

11. ஐஜி வெங்கட் ராமாசார்யரின் அங்கிதம்?

A கோபாலவிட்டலா

B வரதகோபாலவிட்டலா

C குருகோபாலவிட்டலா

D வாசுதேவ விட்டலா

12. கலியுகத்தில் மோட்சத்திற்கு என்ன செய்யவேண்டும் என்கிறார் ஸ்ரீபாதராஜர்?

A தியானம்

B யக்ஞம்

C அர்ச்சனை

D கீர்த்தனை

13. இவர்களில் யார் அங்கிதம் தானே வைத்துக் கொண்டார்?

A புரந்தரதாசர்

B விஜயதாசர்

C கனகதாசர்

D கோபாலதாசர்

14. பிராணேச தாசரின் சொந்த ஊர்?

A பாகல்கோட்

B கர்ஜிகி

C காகிண்டிகி

D லிங்கசுகுர்

15. எந்த ஹரிதாசருக்கு பிருந்தாவனம் உள்ளது?

A ஜகன்னாத தாசர்

B கோபாலதாசர்

C மஹிபதி தாசர்

D பிரசன்னவேங்கட தாசர்

16. லம்போதர, கெரெய நீரனு - இவை __ என்று அழைக்கப்படுகின்றன.  

A பிள்ளரி கீதே

B லக்‌ஷ்ய கீதெ

C லக்‌ஷண கீதெ

D மேற்கூறிய அனைத்தும்

17. ஜகன்னாததாசர் அங்கிதம் வாங்கிய இடம்

A பண்டரிபுரம்

B மான்வி

C திருப்பதி

D உடுப்பி

18. 17/18ம் நூற்றாண்டில் ஹரிதாசர்களின் தலைமையிடம்?

A ஹம்பி

B மந்திராலயம்

C ராய்ச்சூர்

D திருப்பதி

19. நாராயண கதா எனப்படுவது எது?

A ராமாயணம்

B பாகவதம்

C மகாபாரதம்

D பிரம்ம சூத்ர

20. அங்கிதம் என்றால்?

A கையெழுத்து-பெயர்

B பிம்பரூபி பரமாத்மா  

C புனைபெயர்

D மேற்கூறிய அனைத்தும்

21. நம: ஸ்ரீபாதராஜாய நமஸ்தே __ யோகினே

A விஜய

B ஜகன்னாத

C கோபால

D வியாச

22. எந்த ராயர் மடத்து ஸ்வாமிகளின் அனுக்கிரத்தை ஜகன்னாததாசர் பெற்றிருந்தார்?

A வசுதேந்திர தீர்த்தர்

B வரதேந்திர தீர்த்தர்

C இருவரும்

D இருவரும் இல்லை

23. நவபிருந்தாவனத்தில் நடுவில் இருக்கும் பிருந்தாவனம் யாருடையது?

A வியாசராஜர்

B பத்பனாப தீர்த்தர்

C ராம தீர்த்தர்

D ஸ்ரீனிவாச தீர்த்தர்

24. ஜகன்னாததாசருக்கு 40 ஆண்டுகள் ஆயுள்தானம் கொடுத்தவர் யார்?

A மோகனதாசர்

B விஜயதாசர்

C கோபாலதாசர்

D வியாசவிட்டலா

25. பிராணேச தாசரின் இயற்பெயர்?

A யோகப்பா

B திருகப்பா  

C ஜகன்னாத

D ஸ்ரீனிவாச

***





2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...