Wednesday, August 31, 2022

10 உபநிஷத் கன்னட பத்யங்களின் மொழிபெயர்ப்பு

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ் பெங்களூரு

இன்றைய ஸ்ரீவினாயக சதுர்த்தி நாளில் துவங்கிய புதிய புத்தக மொழிபெயர்ப்பு.

ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாஸரின் உபநிஷத் கன்னட பத்யங்களின் மொழிபெயர்ப்பு.

* ஸ்ரீமதாசார்யர் 10 உபநிஷத்களுக்கு பாஷ்யங்களை எழுதியிருக்கிறார் (சம்ஸ்கிருத ஸர்வமூல கிரந்தங்கள்).

* ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாஸர் (1894-1983) அந்த 10 உபநிஷத் பாஷ்யங்களையும், கன்னட பத்யங்களாக இயற்றிக் கொடுத்திருக்கிறார். 

* த்ரி-பதி & ஷட்-பதிகளில் இருக்கும் அந்த கன்னட பத்யங்கள், மிகவும் எளிமையாக புரியும்படியாக, அதே சமயம் உபநிஷத் மற்றும் அதற்கான ஆசார்யரின் பாஷ்யத்தின் அர்த்தத்தினை நமக்கு தெளிவாக விளக்குகின்றன. 

* இதனை எனக்கு பாடம் எடுத்த என் அங்கிதோபதேச குருகளின் ஆசியுடன், இதில் 2 பாஷ்யத்தினை மட்டும் தற்போது தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று சங்கல்பம் ஆகியிருக்கிறது. 

* இதன் வடிவம் இவ்வாறு: உபநிஷத் வாக்கியம்; அதற்கான ஆசார்யரின் பாஷ்ய வாக்கியம்; அதற்கான தாஸரின் கன்னட பத்யங்கள்; அந்த கன்னட பத்யங்களின் அர்த்தங்கள் - என இவை அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். 

* பெண்களும் படிக்கக்கூடிய கன்னட பத்யங்கள்; அனைவரும் அறியவேண்டிய உபநிஷத் ரகசியங்கள் என அனைத்தையும் கன்னடத்தில் நமக்கு இயற்றிக் கொடுத்திருக்கும் ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாஸரின் சேவை அளப்பரியது. 

* இதனை நம் blogல் (https://dasa-sahitya.blogspot.com); youtube channelல் (Jagannatha Kesava) வில் வெளியிட்டு, பின் புத்தகமாகவும் வரவேண்டும் என்று ஸ்ரீகுருகோவிந்த விட்டலனை வேண்டிக் கொள்கிறேன். 

நாஹம் கர்தா: ஹரி: கர்தா:

நன்றி. ஹரே ஸ்ரீனிவாஸா. 

‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

8904458276

No comments:

Post a Comment

2022-23 Updates

ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ், பெங்களூரு 2022-23 Updates இவை அனைத்தும் ஸ்ரீஹரி வாயு குருகளின் அருளால் / ஆசியால் நடந்தவை.  நாஹம் கர்தா ஹரி: கர்தா...